சே!என் அதிகாலைக்கனவுகளில்தேவதைநுழைகிற நேரமாய்ப் பார்த்துகாதுகளில் நுழைந்துதொலைக்கிறதுகாண்டாமணியோசைஇறைவாநான்உன்னை சபிக்கிறேன்…. த.அகிலன்
துயரின் பயணம்….
எப்போதும் ஏதேனுமொரு புன்னகையிலிருந்தே ஆரம்பிக்கிறது துயரம். ஓரு புன்னகையில் இருந்து மற்றுமோர்புன்னகைக்கு… வழிநெடுக புன்னகைகளை வாரியணைத்தபடியும் ஒவ்வொரு புன்னகையின் முகத்திலும் தன்னை அறைந்தபடியும் பயணிக்கிறது துயரம்… அது தன் தீராக்காதலோடு தொடர்ந்தும் இயங்கும் இன்னொரு புன்னகையைநோக்கி த.அகிலன்
தோற்றுப்போகும் சேவல்..
சிக்கிக் கொள்கிறதுவார்த்தைகள்….. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல். சூரியன்அதன்பாட்டுக்கும்நகர்ந்து போகிறது உதிரியாய்உள்ளே நுழைகிறவார்த்தைகளிடம்கவிதையில்லை காற்றுக்குப் படபடத்துமேசையினின்றும்உதிர்ந்து விழுகிறதுதாள்கள்…. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல் த.அகிலன்