வெற்றுக்கண்களுக்குச் சிக்கிவிடாமல்;காயங்கள்நிறைகின்றனமேனியெங்கும்உணர முடிகிறது என்னால்….. ஒரு புன்னகைஒரு முத்தம்அல்லதுஒரே ஒரு பார்வையின்பகிர்தல்கூடப்போதுமானதாயிருக்கும்அவற்றை ஆற்றிவிட ஆனால்நண்பர்களேநிச்சயமாய்பலிகள் தேவையில்லை பூக்களின்செண்டுகளில் இருந்து கத்திகளை எடுங்கள்காயங்கள்இனியும் வேண்டாம்.. த.அகிலன்
ஒளியின் நடனம்..
காற்றிறல்நழுவவிட்ட உன்வார்த்தைகளை முட்களாய் மாற்றும் வித்தைஎங்கனம் சாத்தியமாகிறது என்எண்ணக்கூட்டிற்குள்குஞ்சு பொரித்துக்காத்திருக்கும்நிறையக்கேள்விகள். ஆனாலும்அன்பேஎனக்குள் நிகழ்கிறதுஒளியின் நடனம்என் கனவுகளிற்கு ஒளியூட்டியபடி…… நான் கைகளை குவித்துக்கொண்டுகாவலிருக்கிறேன்ஒளியின் நடனம்நின்றுபோகாதிருக்கஇப்போதுதீர்ந்து போயிருக்கிறதுஉள்ளிருந்தேயெழும் கவிதை ஆச்சரிமாய்எனக்கே புரியாதிருக்கிறஇக்கவிதையின் பாடுபொருள் எனினும் எனக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறதுஇன்னும் தீராமல்ஒளியின் நடனம்.
ஒளியின் குரல்…..
தீபங்கள் பேசத்தொடங்கினமனிதர்கள்குரல்களற்றுத்திணற ஸ்பரிசங்களற்றதீபங்களிற்குக் குரலிருந்தது மௌனத்தின் வேர்களை அறுத்துக்கொண்டுஷதுயரின் பாடல்தொலையத் தொலையதீபங்களின் குரல்காற்றில் எழுகிறது அது புனிதங்களின் மொழி மனிதங்கடந்தவரின்மறைமொழி இப்போதுஉயிரின் நுனிவரைக்கும்இறங்குகிறதுதீபங்களின் குரல் நிச்சயிக்கப்படாதஒரு கணத்தில்தகர்ந்து போகிறதுதீபங்களின் குரல் மனிதர் மீண்டும்குரலுற்றார் உயிர் எரியும் பாடல்காற்றில் எழுகிறது