என்னிடம்மகிழ்ச்சியின்சுவடு தானுமில்லை என்னால்…..உலர்ந்து போனஇரத்தத்தின் அடியில்ரோஜாவின் இதழ்களைக்கற்பனை செய்ய முடிகிறது நேற்றுப் பிடுங்கியெறியப்பட்டபெருமரத்தின்மொட்டுக்களையும்பிஞ்சுகளையும் குறித்ததுயர்மிகும் சொற்கள் மட்டுமேஇப்போதுஎன்னிடமுண்டு அழகுதிர்ந்த கவிதைதுயரமும்பிணமும் நாறிக்கிடக்கும்தெருவழியேஅழுதலைகிறது கேள்விகளற்றநிலத்தில்துயர்மிகும்சொற்களைத் தவிரவும்வேறென்னதான் இருக்கமுடியும்? த.அகிலன்
தாயாய்; ,சகோதரியாய், தோழியாய்….
நான் அண்மையில் இலங்கை வன்னியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்குப் போயிருந்தேன் அந்தஅனுபவங்களை ஒரு குறிப்பாக எழுதியிருக்கிறேன் – த அகிலன் “குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம்அண்ணனின் அன்பு குழந்தைகள் நாம்”என்று ஆடிப்பாடுகிற சிறுவர்கள் எல்லோரும் 3-12வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மழலைமுகம்மாறாது இன்னமும் இருக்கின்ற தமிழ்மண்ணின் புன்னகைகள்.ஆனாலும் அவர்கள் வயது களையும்முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற புன்னகைகளையும் மீறி துருத்திக்கொண்டிருக்கிற ஏக்கமும்துயரமும். மனசின் ஆழங்களை ஊடுருவி நெருமாமலில்லை. ஏதோ ஒரு விதத்தில் போர்…
அருவம் மீதான நம்பிக்கை
இவர்கள்அழிவுகளினின்றும்சிதைவுகளினின்றும்எதிர்பார்க்கிறார்கள்கலையும் மேகங்களிடையேஅவன் வருவதாய்யாவரும் நம்புகின்றனர். ஆயிரம் குளம்படி ஓசைகளுடன்நிறையப் புரவிகளினிடையில்ஒளிரும் அருவமாய்அவனை வருணிப்பர்சிதைவுகளினின்றும்குருதியூறிய,வயல்வெளிகனின்றும்முகாரியினுடையஎல்லைகளிற்கு -வெளியேதுயரம் கடந்துஎப்போதோ எரியூட்டப்பட்டஅவர்களின் கனவுகளைஅவன் தங்களிற்குபரிசளிப்பனென்றும்பேரட்சகனாய்அவனிருப்பதால்பேரற்புதங்கள் நிகழ்த்துவனென்றும்எதிர்பார்க்கின்றார்கள். ஒவ்வோர் எதிர்பார்த்தலின் போதும்அவன் ஏமாற்றினாலும்ஆச்சரியமாய் – இவர்கள்மறுபடியும் எதிர்பார்ப்பர். அவன் வரவைமுன்னிலும் அதிகமாய்…அழிவுகளோடும்காத்திருப்பர் -முன்னிலும்அதிக அற்புதங்களோடானஅவன் வருகையின் மீதானநம்பிக்கைகளோடு…… த.அகிலன்