வெம்பிய நகரின்கானல்நீர்மிகும் தெருக்களில்மழையின் தேவதைகள் யாரும்வருவதற்கில்லை குரல்களற்றமனிதர்களின்கண்கள் ஒளியற்று மங்கின நகருக்குள்தாகித்தலையும்சாத்தான்கள்பெருநகரின்கானல்நீரள்ளிப்பருகிதெருக்களில்வேட்டையாடித்திரிந்தன… இறுதியிலும் இறுதியில்தேவதைகளின் சாபம்நகரின் ஓளிவிழுங்கபாழடைந்து போகிறதுநகர்…. த.அகிலன்
நினைவுகள் மீது படியும் நிழல்…
எனை விலகிபுல்லின்நுனியில் இருந்து ஒரு பறவையைப்போல்எழுகிறதுஉன் முத்தத்தின்கடைசிச்சொட்டு ஈரமும் நான்புதினங்கள்அற்றுப்போனசெய்தித்தாளைப்போலாகிறேன்நீயிராப்பொழுதுகளில்.. மழைநின்றமுற்றத்தில்உன்காலடித்தடங்களற்ற வெறுமைநிழலெனப்படிகிறதுநம்நினைவுகளின்மீது த.அகிலன்
எறும்புகள் உடைத்த கற்கள்
வலிஉணரும் தருணங்களில்எங்கிருந்தோ முளைக்கிறதுஎனக்கான கவிதை காற்றழிந்த மணல்வெளியில்காத்திருக்கும்என்காலடிகாற்றில் அழிவதற்காய் நான்கானலைஅருந்த தயாராகையில்எப்படியாவது காப்பாற்றிவிடுகிறது மேகம் எனக்குத் தெரியும்கடித்துவிடுகிறகடைசிநொடி வரைக்குமேபுகழப்படும் எறும்புகள் ஆனாலும்எறும்புகளிற்குகவலைகிடையாஎதைக்குறித்தும் என்வழியெங்கும்நிறுவிக்கிடக்கிறதுஎறும்புகள் உடைத்தகற்கள் த.அகிலன்