எனக்கும்உனக்குமான இடைவெளிபிரிவின் சொற்களால் நிரம்புகிறது… உதிர்ந்து விழும்நட்சத்திரத்தின் பேரோசைபிரிவின் காலடியில்மௌனித்து வீழ்கிறது. தாகித்தலையும்நதியின் தடங்களில்நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…நம் பிரிவின் சித்திரத்தை.. த.அகிலன்
இது கவிதையில்லை…
ஒரு கடிதம் அக்கா! பிளாஸ்ரிக் பின்னணியில்நீ முகம் காட்டும்புகைப்படங்களில்உன்புன்னகை இயல்பற்றுதொங்கிக் கொண்டிருப்பதாய்படுகிறது எனக்கு. எனக்குத் தெரியும்உன்எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறிஎம்-எல்லோருடையபுன்னகைகளையும் அவர்கள்சிலுவையில் அறைந்து விட்டார்கள்என்பது அவர்களைமன்னித்து விடுஅவர்கள் அறியாதவர்கள். அந்த அதிகாரிக்குஉனது பிரார்த்தனைகளின்பின்னணியில் ஒரு தாயின்இருமல் சத்தம்நிச்சயமாய் கேட்டிருக்காது உன்தங்கையின்கல்யாணம் பற்றி தம்பியின் வேலைபற்றி உறவுகளின் தேவைபற்றி எல்லாவற்றையும் விடஉறவுகளற்று தனிக்கும்மகளின் முகவரி பற்றி ஏக்கம்அதுவும்கூடஅவரிற்குத் தெரிந்திருக்காது…. அவர் மறுப்பதுஉனது இருப்பை மட்டுமல்லஅவர்களின் கண்களிற்கு தெரியாத இச்சிறுதீவில்உன் மனிதர்களின் இருப்பையும் மறுக்கிறார்என்பதுஅவருக்குதெரியாதிருக்கலாம்…….
மீறல்
நிழலுருவில் வசந்தம்நிஜம்ஒளியின் எத்தொலைவிலோ ஒளியின் தொலைவைவிரட்டும் என்காலம்வழிநெடுகஇருளின் கரங்கள்என் விழிமறைக்கும் என்வயசையும்மீறிமனம் கொதிக்கும்அதன்தகிப்பில்என் கரம் எரித்து ஒளி படைத்தேன் உயிர் உருக்கிவழி கடந்தேன்வலியையும்… இருள்சொன்னதுநீ வயசுக்கு மீறியவன்நான் சொன்னேன்இன்னும் இருக்கிறார்கள்வயசுக்கு மீறியவர்கள்.. த.அகிலன்