ஒளிப்படம் கஜானிஇது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி
போர்ப்பசி(புகைப்படம்)
(ஒளிப்பம்.கஜானி)தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால். எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.த.அகிலன்
வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு….(தேன்கூடு போட்டிக்காக)
“வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சிஉள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி “நானொரு சிந்து காவடிச்சிந்து”இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம். அப்பல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை சின்னக்கா எப்பவும் ஒரு கை விளக்குமாறு கையில வைச்சுக்கொள்ளுவா. நாங்கள் எல்லாரும் சந்தோசமா அவவுக்கு பின்னாலதிரிவோம். புல்லு பத்தை எண்டு ஒரு வண்ணாத்திப்பூச்சியையும் விடாமல் அடிப்பம் அடிச்சு…