”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது” என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது. மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான்…
கமராவுக்கு சிக்காத காலம்.
ஏ.குஞ்சம்மா இந்தப்பெயர் எனக்கு இன்னமும் நினைவிலிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. பில் போடுற மேசையைவிடவும் கொஞ்சமே உயரம் கூடிய பொடியனாக இருந்தாலும் எந்தவிதமான சந்தேகக் குறியையும் முகத்தில் காட்டாமல் எனது முதலாவது தொழில்முறைப் புகைப்படத்துக்கு போஸ்கொடுத்த அற்புதமான பெண் அவர்.(அப்பாவிப் பெண்) நான் அப்போது ஸ்கந்தபுரத்தில் யோறேக்ஸ் ஸ்ரூடியோவில்(yorex studio) வேலைக்குச் சேர்ந்திருந்தேன். வேலைக்குச் சேர்ந்திருந்தேன் எண்டு சொல்வது சரியா என்றெனக்கு இப்பவும் தெரியாது ஆனாலும் அப்படித்தான் சொல்லிக்கொண்டேன். மந்தையிலிருந்து…
பாவமன்னிப்பு
எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது? கைநழுவிய சொற்களா? சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா? உதிர்ந்துபோன காலமும் மலராத கணமுமா? என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது? அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர் கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர் எதிரிகளிடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது நேர்மை. யேசுநாதர்கள் பெருகிப்போயிருக்கும் சபையில் ஓரு குற்றவாளியாய் உள்நுழைகிறேன். எல்லோரிடமும்… போதனைகள் இருக்கின்றன தண்டனைகள் இருக்கின்றன கேள்விகள் இருக்கின்றன பதில்கள் இருக்கின்றன நியாயங்கள்…