ஒளிப்படம் கஜானிஇது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம்தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின்ஏக்கத்தை சொல்கிறதா ? த.அகிலன்
சாட்சியாயிருத்தல்…..
எல்லாவற்றிற்கும்சாட்சியாயிருப்பதன் இயலாமை எனை விழுங்குகிறது.. ஒருநாற்பது வயதுக்கன்னியின்கறுத்தப்பொட்டைப்போலநிஜத்தின் உறுத்தல்என் கனவுகளின் மேல்பயணிக்கிறது….. முடியாது புன்னகைக்கும்வேதனைக்கும்அழிவுக்கும்மீட்சிக்கும்அவமானத்திற்கும்……………………. இப்படிஎல்;லாவற்றுக்கும் சாட்சியாய்மௌனத்தை விழுங்கிக் கொண்டுஎத்தனை நாளைக்குஇருந்துவிட முடியும்…ம். த.அகிலன்
கஜானியின் ஒளிப்படங்கள் தாகத்தின் ஒளியும் நிழலும்
நண்பர்களே நான் பழைய பதிவுகளிலே இட்ட முகத்தில் அறையும் நிஜம்,போர்ப்பசி,இன்றைக்குச்சேறு நாளைக்குச்சோறு என்பவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர் கஜானியைப்பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் அவர்கள் எழுதிய குறிப்பு இங்கே கஜானியின் படத்தின் பார்வையாளர்களுக்காக தருகிறேன்.அன்புடன்த.அகிலன் வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜனிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார்….