உன்கொலுசின் அசைவுகளில்நான் உதிந்து கொண்டிருக்கிறென்… உதடுவரை வந்துஉள்ளடங்கிப்போகும்உனக்கான ஒரு சொல்…எனை தின்றுவிட்டுப்போகட்டும். நான்ஏங்கிக்கொண்டிருக்கிறேன்… நடுக்கடலில்கப்பலினின்றும்உதிர்ந்த காலி மதுப்புட்டியைப்போலஉன்மனசின் ஆழங்களுக்குள்போய்விடமாட்டேனா? த.அகிலன்
மூழ்கும் கப்பல்கள்….
பெருமாள் கோவில்சிற்பங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறது மழை நிர்வாணப்பெண்கள்மறுபடியும் நனையமரங்களினிடையே மறையும் கண்ணன். என்காலகளினடியில் மறுபடியும்நழுவி ஓடிக்கொண்டிருக்கிறதுபூமி நீரின் மீதுமுடிவிலிக்கோடுகளைஒற்றைப்புள்ளியில் இருந்துவரைந்து கொண்டிருக்கிறதுஇலையிருந்து நழுவும்ஒற்றைத் துளி. குழந்தைகள் கொப்பிகளைக்கிழிக்கின்றன எனக்குள்மிதக்கத்தொடங்கின கப்பல்கள் இப்போதுநீரினிலாகிறதுகுழந்தைகளின் உலகுயாரேனும் அதைமறுக்கையில் மழைஇடம்பெயர்கிறதுகுழந்தைகளின்கண்களிற்குள்.. எனக்குள்மூழ்கத் தொடங்கினகப்பல்கள்… த.அகிலன்
அபிராமியின் அட்டிகை என்னாச்சு?
நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று தீர்த்துவிட இப்போது மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது.மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.அன்புடன்த.அகிலன் நிலாவுல ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். எவ்வளவு தான் வடிவாக பார்த்தாலும் தடியுடன் ஒரு பாட்டியின் முகம் எனக்கு நிலவில் தெரிந்து கொண்டேதான் இருந்தது. அம்மா என்னை மடியில்…