நான்நம்பிக் கொண்டிருந்தேன்இது நாள் வரையும் மரணத்தின்வாசனை மிகும்ஊரின் தெருக்களைக்கடந்தாகி விட்டதென்றும்…… நகரத்தின்இடுக்குகளில்எனக்கான பூஞ்செடிகள் காத்துக் கிடக்குமெனவும்….. தடைகளும் எல்லைகளுமற்றுவிரியும் புதிய வானத்தில்என்சிறகுகள் கொண்டேஎனக்கான வானவில்லைவரைந்து விட முடியுமென்றும்….. நான்நம்பிக் கொண்டிருந்தேன்இது நாள் வரையும்….. மரணத்தின்வாசனைமிகும்அத்தெருக்கள் தான்என்உள்ளங்கையின் ரேகைகள்என அறியாது… த.அகிலன்
வற்றிக்கொண்டிருக்கும் பிரியம்..
பிரியத்தின்சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன. தாகித்தலையும்நம்இறுதிப்பார்வைகள்நதியைப்போல்ஓடிக்கொண்டிருக்கிறதுநமக்கிடையே பற்றியிருந்தவிரல்கள்இளகத்தொடங்குகையில் வானம்குமுறத்தொடங்கியிருந்தது இருவரும்கண்கள்ஏன் முதுகுகளிடம்இல்லை என்பதாய் நடக்கத்தொடங்கினோம் சுவடுகளைக்கரைத்தபடிபெய்து கொண்டிருந்ததுமழை. த.அகிலன்
கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்..
“பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒருபாட்டு” இந்த பாடல்காட்சிதான் எனக்கு நான் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவில் தீபங்களை வைத்து எடுக்கப்பட்டவற்றில் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர். எங்கள் சின்னவயதில் விளக்கீடு என்றால் ஒரே கொண்டாடடம் தான் .தீப்பந்தங்களை கொழுத்தி…