என் எதிரேயிருக்கும் தேனீர்க் குவளையுள்வீழ்ந்து ஓய்கிறதுமின் விசிறி….. நான்மூடப் படாதகவிதைப் புத்தகத்தைமறுபடியும் பிரிக்கிறேன்…. தாள்களிடையில்தட்டுப் படுகின்றஉன்ஞாபக ஸ்பரிசங்கள்என்விரல்களில் வழிய இந்தக் கவிதையைஎழுதத்தொடங்கினேன் ….
கிறிஸ்மஸ் – கொண்டாடப்படும் ஒரு அகதியின் பிறப்பு
“அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே” இதைப் பாடியது அனுராதா சிறீராம் தான் என்று நான் கொஞ்காலம் நம்பவேயில்லை. அவர் “டேய் கையை வைச்சுகிட்டு சும்மாயிருடா” என்கிற மாதிரியான மார்க்கப்பாடல் களைத்தான் பாடுவார் என் நினைத்துக்கொண்டிருந்தேன். ம் இந்தப்பாடல் அனுராதாசிறீராமின் குரல்வளத்தின் ஒரு மைல்கல். கிறிஸ்மஸ் கொண்டாட உலகம் தயாராகிறது. ஊரில் கொண்டாடிய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன். நான் ஒரு சைவக்காரனாக இருந்தாலும் கிறிஸ்மஸ் எப்போதும் என் கூடவே வருகிறது….
காத்திருப்பொன்றின் முடிவு(ஒரு அஞ்சலி)
ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றிய நினைவுப்பகிர்வு நான் அவரை சுமார் நான்கு வருடங்களிற்கு முன்பாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில் சந்தித்தேன். இவர்தான் கவிஞர் வில்வரத்தினம் என நிலாந்தன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . இவர் அகிலன் கவிதைகள் எழுதுவார் என்று அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு ஞாபகமிருக்கிறது நான் உடனே யார் சுனா.வில்வரத்தினமா என்று கேட்டேன். சுனா கொஞ்சம் அழுத்தமாக இருந்தது கேள்வியில் சு.வி…