நான் தேடுகிறேன். தொலைந்தது கிடைத்தபின்னும் தொடர்ந்தும் தேடுகிறேன் பொருளை அல்ல அதன் அடையாளத்தை.. எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு…
Tag: ஈழம்
படகில் நுழையாக் கடல்
அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டு விழிக்கும் எல்லாக்கனவுகளும் விசாரணையிலேயே தொடங்குகிறது. நான் ஓர் அகதி என்னிடமிருப்பதோ அவளைச் சேர்வதான எத்தனங்களும் விசாரணைக்கான பதில்களும் கொஞ்சக் காகிதங்களும் திரும்பவும்…
கேட்கவியலாச் சொல்
தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009) எனக்கு நினைவிருக்கிறது நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல்…