நான்வெற்றுத்தாள்களைவாசிக்கிறேன்…. குருதியும்ரணங்களும் வழியும்துயரத்தின் மிகு சொற்கள்அத்தாள்களின் மீதுஉறைந்துள்ளன…. தாள்களின்ரகசிய இடுக்குகளில்ஒழிந்திருக்கிறது..வேட்டைக்காரனின்அம்புகள் தீட்டியஅழுகையின் வரைபடம்.. எழுதப்படாதிருக்கிறஎந்தச்சேதியிடமும்புன்னகையில்லை…. தன் பின்னலைத்தளர்த்தியஒரு கிழவியின்சாபத்தின் சொற்கள்ஊரை நிறைத்தது… பின்பொருநாள்…பூவரசம் வேலிகளைத்தறித்தபடியெழும்கோடரியின் கரங்கள்ஒரு குழந்தையிடமிருக்கக்கண்டேன்…. தடுக்கமுயலும்கிழவியிடமிருந்து எழும்இயலாமையின் சொற்கள்தேய்ந்து போயிற்றுஊடுபத்தியகைவிளக்கைப்போல…..
வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்…..!?
என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து விட்டிருக்கின்ற அரசியல் பற்றி நிறைய விவாதங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் கீற்று இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிற திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி வைரமுத்துவின் இன்னொரு முகத்தை சத்தமில்லாமல் நாகரிகமாக தோலுரித்திருக்கிறார் இங்கே அந்த கேள்வியம் சுவாரஸ்யமான பதிலும் இங்கே. இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு…
ஆவிகளும் விமானங்களும்…..
நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம் புத்தகத்தில் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது. எதற்கு அவர்கள் இதனைக் கண்டு பிடித்தார்கள். எங்கள் மீது குண்டுபோடவா? எத்தனை விதம்விதமான விமானங்களின் குண்டுவீசும் திறன்களை சமாளித்து வந்திருக்கிறோம். அவ்ரோ, புக்காரா, சுப்பர்சொனிக், கிபிர் இப்படி விமானங்களை பறக்கும் ஒரு…