இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது. ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்… பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது. பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது… யாரும்விசாரணைகளை நிகழ்தும் வரைஎல்லாவற்றினதும்மௌனச் சாட்சியாய்அலைந்து கொண்டேயிருக்கும்அது.
இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)
01. எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச் சொல்வான். அவனது இந்த திகைப்பூட்டும் இந்த உலகம் அவனது நண்பர்களாலும், அவர்களின் உதவியாலும்,கொஞ்சம் புத்தகங்களாலும் நிரம்பியிருக்கிறது. சென்னையின் நடைபாதை வாசி….
CHILDREN OF HEAVEN (யாரும் நுழைய முடியாச் சுவர்க்கம்)
நல்ல விசயங்கள் எனக்கு தாமதமாகவே நிகழ்கிறது. அல்லது நான் தாமதமாகவே கண்டு கொள்கிறேனோ என்னவோ தெரியாது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சஞ்சிகைகள் மூலமாகவும் நண்பர்கள் வாயிலாகவும் நிறையத் தெரிந்து கொண்டதாக நான்நினைத்துக்கொண்டிருந்த children of heaven என்கிற திரைப்படத்தை. இன்றைக்கு பார்த்தேன். நிறைய நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்றைக்கு மழைபெய்து கொண்டிருந்தது. வழக்கமாக மழையைக் கண்டால் நின்று போகிறமின்சாரம் அதிசயமாய் இன்றைக்கு இருந்தது. நண்பர்கள் யாருமில்லை நான் தனியே. தனிமைஒரு…