விளக்குகள் அணைக்கப்பட்ட கரையில் தளும்பிக்கொண்டிருக்கிற மதுக்கிண்மெனக்கிடக்கிறது கடல்.. உனது நினைவுகளெனப் பற்றியிழுத்து எனை வீழ்த்தும் திட்டங்கள் வகுக்கிறது கரைமணல்.. யாரோ ஒருத்தனின் முத்தங்களிற்கான யாரோ ஒருத்தியின் சிணுங்கலை எடுத்துப்போகிறது காற்று எனைக்கடந்து.. உனது முத்தங்களை நினைவூட்டி.. உன் சாயலை ஒத்த ஒருத்தியிடம் தயங்கிநிற்கிறதென் பாதங்கள்.. நிலவு எரிந்துகொண்டிருக்கிறது.. ஒரு மதுக்கடையின் மங்கலான விளக்குப்போல.. உலகம் ஒரு நாகரீகமான மதுக்கடை.. அதனால் தான் போதை எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது.. காதல்,வெற்றி,காமம் எல்லாவற்றிலும் உள்ளொளிர்ந்து…
காதல் சிலுவையில் 01
நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு வந்த பிரியங்களையெல்லாம்.. மழைநின்ற நண்பகலில் எடுத்துக்கொண்டு வெளியேறினாய்.. வானவில் அழியத்தொடங்கியிருந்த அந்த மழைப்பகல் கோடையாகிற்றெனக்கு மட்டும். பிறகு பெய்த…
உன் வருகையைக் கொண்டாடுதல்
01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்… 02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால் ஆனவையாயிருக்கையில் கற்களை வீசிவிடக் கூடாதென்கிற தயக்கம்…