என்னை நிராகரியுங்கள் எல்லாமுமாகிய என் சர்வவல்லமை பொருந்திய பிதாக்களே என்னை நிராகரியுங்கள் எப்போதும் துயரத்தின் சாயல் படிந்த ஊரின் தெருக்களை விட்டேகிய கொடுங்குற்றத்திற்காக என்னை நிராகரியுங்கள் உங்களிற்காக கொஞ்சப்புன்னகைகளையும் எனக்காக உயிர் குறித்த நம்பிக்கைகளையும் உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடிய மரணங்கள் பற்றிய கதைகளையும் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் ஏதிலியாகிய என்னை மேட்டிமை தங்கிய பிரபுக்களே நிராகரியுங்கள். உங்கள் தொழுவத்துக்குள் நுழைந்துவிட்ட ஒரு அருவருக்கத்தக்க ஓநாயைப் போல என்னை எண்ணுகிறீர்கள் எனக்குத் தெரிகிறது வெறுப்பின்…
முதல் முத்தமும் சில முதல் நாட்களும்..
இன்றைக்கு புது வருசத்தின் முதல் நாள். முதல் நாட்கள் எப்போதும் அன்றைய பொழுதில் அற்புதமாயிருப்பதில்லை. நினைவுகளில் மடிக்கப்பட்டு பின் எப்போதோ புரளும் நினைவின் பற்சக்கரத்தைப் பற்றியபடி மேலேறி வரும்போதும் இருளடர்ந்த குகைக்குள்ளிருந்து சட்டெனத் திசைகளெங்கும் மின்மினிப்பூச்சிகள் பறந்து வர்ணஜாலம் காட்டுவதைப்போல ரம்யமாயிருக்கும். அல்லது மனசுக்குள் இருக்கும் நினைவுகளையெல்லாம் விரட்டி வெறுமையாக்கி பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதைப்போலத் தோற்றத்தை தரும். அடடா இப்படியெல்லாம் செய்திருக்கிறேனா என் வாழ்க்கையில் என்று சில சமயம் வெட்கம்…
அகிலனும் ஆனந்தவிகடனும்…
01. அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார் நினைவுக்குள் மிதக்கிற சிகரட் முத்தமும் சாராயம் நெடிக்கிற கச்சான் அல்வா உருண்டையும் இன்றைக்கும் அவரிடமிருந்தது… தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய் கச்சான் அல்வாவைச் சொல்கிறார்… எப்போதும் அவர் இப்படித்தான் வருகிறார்.. நான் வளர்ந்ததை அப்பா அறியாரா இல்லை வளர்ந்த பின்னான அப்பாவை என் கனவுக்குத் தெரியாதா பத்தொன்பது வருடங்கள் கழிந்துவிட்டதென்றும் என் முத்தங்களிற்கான காரணங்களும் அர்த்தங்களும் மாறிப்போயின என்பதையும்…