எழுதியவர்- கருணாகரன் அகிலனின் கவிதைகளைப்பற்றி எழுதத் தொடங்கும்போது முதலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. எந்த அகிலனின் கவிதைகளைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்ற கேள்வி உருவாகக்கூடியமாதிரி, தமிழில் பல அகிலன்களின் பெயர் பதிவாகியுள்ளது. அதிலும் ஈழத்தில் மட்டும் இரண்டு அகிலன்களுண்டு. ஒருவர் பா. அகிலன். மற்றவர் த.அகிலன். இருவருமே சமகாலத்தில் கவிதைகளை எழுதிவருகிறார்கள். இரண்டுபேருமே நவீன கவிதையின் புதிய பிரதேசங்களைக்கண்டடையும் முனைப்புடையவர்கள். எனவே இதில் எந்த அகிலனைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்று…
சாத்தானின் காதலி
காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை. காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருப்பான் ஒருத்தன்… தன்னைச் சட்டைசெய்யாது.. வேறுயாரோ ஒருத்தியின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் ஒருத்தனிடம் காலம் முழுதும் தன்னை நிராகரிக்கிற ஒருவனிடம்…
காதலின் சிறைக்கைதி…
உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன. என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின. பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர். வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன. முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார். அந்த அளப்பெரிய காதலனுபவத்தை ஜிப்ரானுக்கு பரிசளித்தவள் அவனது செல்மா. ஜிப்ரான் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தன் தந்தையின் ஆத்ம நண்பரான பாரிஸ் எபாண்டி கராமி என்பவருடைய செல்ல மகளாக செல்மாவைச்…