(தமிழ்த்திரையின் தலைநிமிர்த் தடப்பதிவாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் வெயில்(2006). வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த ‘வெயில்” 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007) கலந்து கொண்டது. இதன் இயக்குநர் வசந்தபாலன் ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கியவர். இயக்குநர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். இன்று தமிழ்த் திரை உலகின் கவனயீர்பபைப் பெற்றுள்ள இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இத்தகைய இளையோரிடமிருந்து காத்திரமான படைப்புகளை தமிழ்த் திரை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்னையில், சலனம் இணையத்திற்காக அகிலனுடன் மனம் திறக்கிறார் வசந்தபாலன்.)
நேர்காணலில் இருந்து
– நான் சினிமாவை இரண்டு வகையாகத்தான் பார்க்கிறேன். சுவாரசியமான சினிமா, சுவாரசியம் அற்ற சினிமா.
– என்னுடைய முதலாவது படம் தோல்வி. தோல்வியுற்ற மனிதனை இந்த சமூகம் எப்போதும் நிராகரிக்கும். அதுபோலவே என்னையும் நிராகரித்தார்கள் – ஒதுக்கினார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது என் நன்றி. அது தான் வெயில் படத்தினுடைய உயிரோட்டமாக இருந்தது.
– நான் ஒரு இலக்கியக்காரன் இலக்கியம் குறிப்பாக நவீன இலக்கியத்தின் பரிச்சயம் கொண்ட ஆள்…. அதன் காரணமாகத் தான் என்னுடைய படங்களின் படிமங்களின் காட்சிப்படுத்தல் சாத்தியமானது.
– உலகப் பார்வையாளர்கள் குறிப்பாக கேன்ஸ் அமைப்பினர் இந்தப்படத்தை தேர்வு செய்தமைக்கான காரணமும் கூட குழந்தைகளின் உணர்வுகளைக் குறித்து இந்தப்படம் பேசுவதாக இருக்கிறது! நானும் இந்தப்படத்தில் முக்கியமான படிமமாக கருதுவது அதைத்தான். குழந்தைகளின் மனதில் சின்னவயசில் ஏற்படுகிற காயம் அவர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதைத்தான் இந்தப்படம் பேசுகிறது.
– குலத்தை காத்தவன் குலசாமி. இப்படி குடும்பத்திற்கு சந்தர்ப்பவசத்தால் ஏதாவது செய்தவன் மதிப்பிற்குரியவனாக ஆகும் போது அவனுக்குப் பிறகு நான்காவது தலைமுறை ஐந்தாவது தலைமுறை அவனை தங்களுடைய குலசாமியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது தான் தெற்கத்திய மனிதர்களுடைய வாழ்க்கை.
நேர்காணல்: இயக்குநர் வசந்தபாலன்
சந்திப்பு: அகிலன்
விரைவில் ஒலிவடிவில் இடப்படும் எழுத்தில் முழுவதும் படிக்க அழுத்துங்கள்
வசந்த பாலனின் வாழ்க்கையின் நிஜங்கள் கற்பனை கலந்து மாற்றங்களுடன் தான் ‘வெயில்’ ஆகி இருக்கிறது.