தலைகளாலான
தெருவில்….
குழந்தைகளின்
புன்னகைள் நிரம்பிய
வண்ணங்களை
விற்கிற
பலூன்காரன்….
தன்புன்னகையைக் கேட்டு
வீரிட்டழும்
ஒரு குழந்தை
விக்கித்து ஓய்கையில்…
ஏனோ
எச்சில் ஒழுக
என்பெயர் சொல்லிச்சிரிக்கும்…
ஒரு முகம்
கடந்து போகிறது என்னை….
தலைகளாலான
தெருவில்….
குழந்தைகளின்
புன்னகைள் நிரம்பிய
வண்ணங்களை
விற்கிற
பலூன்காரன்….
தன்புன்னகையைக் கேட்டு
வீரிட்டழும்
ஒரு குழந்தை
விக்கித்து ஓய்கையில்…
ஏனோ
எச்சில் ஒழுக
என்பெயர் சொல்லிச்சிரிக்கும்…
ஒரு முகம்
கடந்து போகிறது என்னை….
கவிதை நன்றாக இருக்கிறது.
இதே போன்ற ஒரு பலூன் கவிதையை சமீபத்தில் படித்து ரசித்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
“குழந்தைகளின்
புன்னகைள் நிரம்பிய
வண்ணங்களை
விற்கிற
பலூன்காரன்…
வாழ்த்துக்கள்.
நன்றி கென் அண்ணா மற்றும் மஞ்சூர் ராசா
“குழந்தைகளின்
புன்னகைள் நிரம்பிய
வண்ணங்களை
விற்கிற
பலூன்காரன்…”
நிஜமாகவே நிறைய யோசிக்க வைத்தது. அருமை!
குழந்தைகளின்
புன்னகைள் நிரம்பிய
வண்ணங்களை
விற்கிற
பலூன்காரன்….
mm. nanru.
அந்த அழும் குழந்தை நீங்கள்.
ஆனாலும் பின்னர் புரியவில்லை. அல்லது கவிதை முற்றுப்பெறவில்லையோ.
இருக்கலாம் நளாயினி அக்கா… இப்போதெல்லாம் கவிதைகள் முரண்டு பிடிக்கின்றன எனக்கு கிட்டே வர…
:-)))
கவிதை எல்லாம் ரொம்ப தூரம் எனக்கு என்ன சொல்வது என்று தெரியாது :-(((
பலூன் என்று பார்த்ததால் வந்தேன்.
குழந்தைகளின் சந்தோசத்தை , பலூன்காரன் என்பதால் உரிமையுடன் அருகில் வரும் அருகாமையை பல முறை அனுபவித்துள்ளேன்.