நான்
சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்..
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது.
அது
எப்போதும் மகிழ்ச்சியின்
எதிரியாயும்
துயரத்தின்
தொடர்ச்சியாயுமே நீள்கிறது.
எல்லோருடைய
புன்னகைகளின் பின்hனால் உள்ள
வேட்டைப்பற்கள் குறித்தும்
ஒளிரும் ஓவ்வொரு வார்த்தைகளினதும்
குரூரநிறத்தையும்
சிந்தனைதான்
எனக்குச் சொலலித்தருகிறது..
புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
மனிதர்களின்
கண்களின் பின்னால் உள்ள
இருள் நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான்
நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான்
சிந்திப்பதை நிறுத்தியேயாகவேண்டும்
த.அகிலன்
அருமையான சிந்தனை அகிலன். அட அதிகம் சிந்திக்காதீர் நண்பா..:-)
வார்த்தைகள் கண கச்சிதம்.
-விழியன்.