என்னிடம் நிறைவேறாத
இக்கவிதையின்
பின்னரும்
தேங்கிக்கிடக்கும்
வார்த்தைகள்
உனக்காய்….
மின்சாரமற்ற
ஒரு நாளின் இரவை
குண்டுச்சத்தங்கள்
நிறைத்தன.
அமைதியும் தூக்கமுமற்ற
அப்பொழுதுகளை
நீ மீளவும் தருகிறாய்….
காற்றில் தொலைந்துபோன
கைவிளக்கின் ஒளியோடு
போயின உனது பாடல்கள்.
உனது பாடல்களை
மீட்கவும்…….
காற்றில் தொலைந்து போன
கைவிளக்கின் ஒளியைக்காணவுமாய்
நீள்கிறது என்காத்திருப்பு…
எனக்கு அப்போது
தெரிந்திருந்தது
தூங்காதிருக்கவும்
காத்திருக்கவும்
விளக்கின் ஒளியையும்
உனது பாடல்கள் குறித்தும்
த.அகிலன்
அகிலன் உங்கள் கவிதைகள் வித்தியாசமாக உள்ளன. புரிவதற்கு கடைசி 2 தரமாவது படிக்கணும் எனக்கு. இதில பாராட்டவேண்டியது என்ன என்றால் உங்க கவிதைகள் படிப்பவர்களுக்கு(மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு) ஒரு தேடுதலை உருவாக்கிறது.
வாழ்த்துக்கள்