உன்
கொலுசின் அசைவுகளில்
நான் உதிந்து கொண்டிருக்கிறென்…
உதடுவரை வந்து
உள்ளடங்கிப்போகும்
உனக்கான ஒரு சொல்…
எனை தின்றுவிட்டுப்போகட்டும்.
நான்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன்…
நடுக்கடலில்
கப்பலினின்றும்
உதிர்ந்த
காலி மதுப்புட்டியைப்போல
உன்
மனசின் ஆழங்களுக்குள்
போய்விடமாட்டேனா?
த.அகிலன்
அகிலன்,
நேற்று வலைப்பதிவர் சந்திப்பில் நீங்கள் உணர்த்தியவை ஏனைய வலைப்பதிவாளர்களின் இதயங்களை எவ்விதம் இளகச்செய்தது என்பதைக் கண்டேன். ஹிட்லரின் கோயபல்ஸ் வழிவந்த இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் பொய்முகத்தை நீங்கள் அங்கு வெளிப்படுத்திப்பேசியது இக்காலகட்டத்தின் தேவையாக இருந்தது. நன்றாக இயல்பாகப் பேசுகிறீர்கள். கூட்ட முடிவில் சொல்லிவிட்டுப் போகலாமென்று உங்களையும் நிலவனையும் தேடினேன். காணவில்லை.
vegu naatkalagi vittadu ipadi oru kavidhai padithu..