எல்லாவற்றிற்கும்
சாட்சியாயிருப்பதன்
இயலாமை
எனை விழுங்குகிறது..
ஒரு
நாற்பது வயதுக்கன்னியின்
கறுத்தப்பொட்டைப்போல
நிஜத்தின் உறுத்தல்
என் கனவுகளின் மேல்
பயணிக்கிறது…..
முடியாது
புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்
…………………….
இப்படி
எல்;லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்…ம்.
த.அகிலன்
கவிதை நன்றாக உள்ளது.
“நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா”
பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.