கொஞ்சமாய்
உள்நுழைந்து பார்க்கும்
மழை..
மேலோடு
தடவிப்போகும்
நிலவு..
உள்ளே புகுந்து
அடிக்கடி
விள்ககை அணைத்துவிடுகிற
காற்று…
ஆசுவாசமாய்
அடுப்பைக் கடந்து
நடக்கும்
பூனை
ஆனாலும்..
விடியலில்
பூக்கத்தான் செய்கிறது
முற்றத்து
நித்திய கல்யாணி.
நண்பர்களே 1995 ல் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்து வெகு தொலைவில் இருந்த அக்கராயன் என்னும் கிராமத்தில் நாங்கள் வசிக்க நோர்ந்து அந்த இடப்பெயர்வு அனுபவங்களின் பதிவு இது
த.அகிலன்
அகிலன்,
உங்கள் கவிதைகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. உங்கள் வயது உண்மையெனில் ஆச்சரியத்தை மூன்று மடங்கால் பெருக்கிக்கொள்ளுங்கள். முன்னொருபொழுதில் பத்திரிகையில் பணிபுரிந்தபோது என்னை வியப்பிலாழ்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கவிதையை எழுதிய த.அகிலன் நீங்கள்தானா…அந்தக் கவிதையை உங்கள் வலைப்பக்கத்தில் தேடினேன். காணவில்லை. அதன் சொற்கள்… ம்… “மூலத்துள் அமர்ந்துள்ள சொற்கள்” என்றெல்லாம் வரும். அதாவது போரில் அழிந்தபின்னும் மீள உயிர்பெறும் ஊர் என்ற பொருளில் அமைந்த கவிதை.
கிளிநொச்சியில் நான் வாழ்ந்திருக்கிறேன். உண்மையில் வாழ்வு அங்குதானே இருக்கிறது.
நதி.