மஞ்சு ஒரு அழகான குட்டிப்பெண். 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும் போதெல்லாம் அவள் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்ற சின்னக்காவின் வார்த்தைகளை நம்பி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்துக்கொள்வாள்.. அகிலன் மாமா ஆள்தான் கறுப்பு மனசுமுழுக்க வெள்ளை (நம்பலாம்) என்று அவளது கனவில் ஒரு பட்டாம் பூச்சி சொல்லிய நாளொன்றில். அவளது அகிலன் மாமா வெள்ளையாய் மாறுவதற்காக எனக்குச் சிலமுத்தங்களும் தந்திருக்கிறாள்… அதற்குப்பிற நிறையத் தடைவை..
கடவுள் என்கிற சமாச்சாரங்களில் நம்பிக்கையில்லையெனச் சொல்லித்திரிகிற கோயிலுக்குப்போகாத நெற்றியில் திரு நீறு பூசிக்கொள்ளாத ஒரு நாளில்.. தன் அம்மாவோடு கோயிலுக்குப் போய்விட்டு வந்து என் நெற்றியில் அச்சிறுபெண் “அப்பு சாமி” என்று பெரியவர்களின் தொனியில் சொல்லியபடி திருநீற்றைப்பூசிவிடுகையில் நான் கடவுள் இருந்துவிட்டுப்போகட்டும் என்று நினைத்தேன். அந்த அழகான கைகளை அவள் இழந்துவிட்டாள் இந்தப் போர் நாசமாய்ப்போன கொடிய போர் தின்றுவிட்டது அவளது பிஞ்சுக்கைகளையும் அச்சிறுமியின் கனவுகளையும்.. தன் நான்கு வயதில் எனக்காகவும் சேர்த்து வேண்டிக்கொண்ட அந்தச்சிறுபெண்ணை ஏன் இந்தப்பாழாய்ப்போன தெய்வங்கள் கைவிட்டன?
5 வயதுச்சிறுபெண்ணுக்கு கையில்லையா? ஏன் என்கிற கேள்விகள் அபத்தமாகப்பட்டது எனக்கு.. இதுதானே நடக்கிறது.. பிறந்த குழந்தைகளே கைகளை இழக்கும் போதும் உயிரை இழக்கும் போதும்.. இது சாதாரணம் தான்.. ஆனாலும் மனசுக்குள் எதுவோ நெருடியது.. எதுவோ தொண்டைக்குள் சுழன்றாடிது.. நனைந்த கன்னங்களை துடைத்துக்கொள்கிறேன்.. இப்படித்தான் மஞ்சுக்குட்டியும் நான் முத்தமிடும்போது கன்னங்களைத் துடைத்துக்கொள்ளும்.. ஆனால் எல்லாவற்றையும் விட வேதனையானது இதுதான் மஞ்சுவுக்கு தான் எதற்காக கைகளை இழந்தோம் என்பதைப் புரிந்துகொளவியலாமல் இருப்பதுதான். அது எவ்வளவு கொடுமையான தண்டனைகள் தவறானவை சரியானவை என்பதற்கு முன்பாக அவை எதற்காக வழங்க்படுகின்றன என்ற காரணங்கள் முக்கியமானவை இல்லையா.
அம்மா வெளியே போயிருக்கிற நேரமாகப் பார்த்து அவளுக்கு தெரியாமல் சக்கரையை திருடித் தின்றுவிட்டு வாய்முழுதும் சக்கரை அப்பியிருக்க அம்மா வந்ததும் கேப்பாள் சக்கரை எடுத்து சாப்பிடனியளோ கண்களால் சிரித்தபடி இல்லையே என்று சொல்லும் குழந்தைக்கு தண்டனையாய் அம்மா முத்தங்களைத்தான் பரிசளிப்பாள். அம்மா மட்டுமென்ன குழந்தைகளைப் நேசிக்கிற எவனாலும் அந்தத் தண்டனையைத்தான் அவற்றுக்கு தரமுடியும்.செய்த தவறுக்கே தண்டனைகள் இனிக்கிற குழந்தைகளில் உலகில் செய்யாத தவறுகளுக்கான தண்டனைகள் வலிப்பதில் என்ன நியாயம் இருக்கமுடியம்.
ஆனால் தான் எதற்காக குண்டுகளால் தாக்கப்படுகிறோம் என்கிற காரணங்களை அறிந்து கொள்ளாமலேயே அவள் தண்டனை பெறுகிறாள். செத்துப்போகிறாள்..அவயவங்களை இழக்கிறாள்.
HOTEL RWANDA படத்தில் ஒரு காட்சி வரும் ஒரு செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாகரி சொல்லுவாள். நான் நிறைய அனாதைக் குழந்தைகளைச் சந்தித்தேன் அந்தக் குழந்தைகள் சொல்லின “தயவு செய்து அவர்கள் எங்களைக் கொல்லவேண்டாம் என்று சொல்லுங்கள் சத்தியமாக இனியொரு தடைவை நான் துசி இனமாகப் பிறக்கமாட்டேன்” (Please don’t let them kill me. i promise I won’t be tutsi any more) அந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி இப்படிச் சொல்லியபடி அழுவாள்.
வன்னியிலும் குழந்தைகள் அப்படித்தான் சொல்லியழும். “தயவு செய்து எங்களை இந்தமுறை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்களாகப் பிறக்கமாட்டோம்” இந்தக் குரல் போர் நடத்துகிற எந்தத் தரப்புக்குமே கேட்பதில்லை. வெற்றிகளின் போது போரையும் தோல்விகளின் போது போர் நிறுத்தத்தையும் கோருகிற. கிரிக்கெட் ஸ்கோரைப்போல போரில் இருந்து உதிருகிற எண்ணிக்கைகளையும் எதிர்கொள்கிற தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக வெளிகளில் வைத்துக்கொண்டிருக்கிற எந்த……………… டிக்கும் இந்த அழுகுரல் ஒரு பிரச்சினையில்லை.
பதுங்குகுழிகளில் இருந்து
சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு..
குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்..
(சிலந்திகள் வெளியேறிய பதுங்குகுழிகள்)
குழந்தைகள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கின்றன. பால்யத்தில் துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சவும் சில பொழுதுகளில் அவற்றைச் சுமக்கவும் நிர்;பந்திக்கப்படுகிறார்கள் குழந்தைகள். போர் குழந்தைகளைத் தின்றுகொண்டிருக்கிறது. பல்வேறு வழிகளிலும் காலத்தால் திருப்பித்தரமுடியாத பால்யத்தின் ஆனந்தத்தை குழந்தைகள் இழக்கிறார்கள். அச்சமுற்றும் தயங்கியும் தமக்குள் உள்ளொடுங்கியவர்களாகவும் அவர்கள்மாறிப்போகிறார்கள்.
தமிழனாகப் பிறந்ததற்காக வன்னியில் இருக்கிற ஒருவன் சாகலாம் சாகவேண்டும் அப்படி சாகாவிட்டால் (பத்திரமான வெளிகளில் தங்கியிருக்கிற எங்கள் மானம் என்னாவது) ஆனால் ஒரு குழந்தை தான் எதற்காகத் சாகிறோம் என்கிற காரணம் தெரிந்துகொண்டு சாவது மேலானது இல்லையா அந்த வாய்ப்பை குழந்தைகளிற்கு வழங்கவேண்டும் நண்பர்களே?
🙂
உதாரப்பா கனகசபை?? நாட்டு நடப்பே தெரியாமல் இருக்கிற மனுசன்?
🙁
கண்ணீர் துளியுடன் இளா
புலிகள் ஆயுதத்தை கீழ போட்டுட்டு உலக நாடுகளிடம் உயிருக்கு உத்திரவாதம் கேக்கவேண்டும்.
romba manasukku kastama irukku
மனசுக்கு கஸ்டம் எண்டதையே நேர வந்து சொல்ல உமக்கு கஸ்டம்.. ம்..
//உதாரப்பா கனகசபை?? நாட்டு நடப்பே தெரியாமல் இருக்கிற மனுசன்//
ஓம் ஓம் நிர் எழுதற நாட்டு நடப்புகளையும் பாத்தண்டுதான் இருக்கிறன்
யுத்தம் கொடுக்கிற வலிகளை யாரும் கவனிப்பதேயில்லை அகிலன் அது போதும் போதும் எறன்றாகி விட்ட பின்னரும் தீர்வைக்காண்கிறார்கள் இல்லையே…
கொசோவாவில் குண்டு துளைத்து குழந்தை செத்தாலும் காசாவில் குண்டு துளைத்து குழந்தை செத்தாலும் ஏன் குழந்தைக்கு பெத்ததுகள் அடித்தாலுமே சர்வதேசத்தில் சட்டமுண்டு… எல்லாரும் கேட்பார்கள்.. கூக்குரலிடுவார்கள்… நாமென்ன செய்வது?? 8கோடி தமிழினமிருந்தும் என்னதான் நடந்தது???? குற்றுயிரும் குடல் வெளியிலுமாய் சிதறிக்கிடக்குதுகள் எம் சிறுசுகள்…
என்ன கவலையென்றால் எண்ணிக்கையில் எம்மைவிட மிகக் குறைவேயான கொசோவாவை காக்க ஜ.நா கூட படையனுப்பியது..ஆனால் ஜயோ எமைகொல்லாதீர் என எம் உறவுகள் தமிழகத்தின் 7 கோடி தமிழர்கள் கத்தியும் இந்தியா படையனுப்பி கொல்லுது…
இந்த பிணவெறி பிடித்த அரசியல் தலைவர்கள் தம் அவயங்கள் இழந்து அணுவணுவாய் சாகவேண்டும்… அந்த குழந்தைகளின் அலறலில் இவர்கள் ஊனமாக வேண்டும்…..
கடவுளே நீ உண்மையென்றால் பிணவெறியர்களிடமிருந்து எம் குழந்தைகளையாவது காப்பாற்று..
my heart is aching.enathu azhukai nitkum naalai ethirparkiren.im praying god.
மனது கனத்துவிட்டது…
செந்தழல் ரவி
இதைவிட கொடுமை எவர்க்கும் இல்லை. வேதனையிலும் வேதனை.
🙁 வார்த்தைகள் வரவில்லை எழுத…
எண்ணிப்பார்க்க முடியா கொடுமைகளினை நயமான வரிகளில் தரும் போது கூட இரசிக்க முடியவில்லை கண்ணீர்தான் முட்டுகிறது…அருமை.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
வார்த்தைகளின் கனதியும்,உண்மைகளின் உறைப்பும் மனதை சோகமாக்கி விட்டது..
இதனால் தான் அடிக்கடி எம் இலங்கைத் தமிழரைப் பற்றி ‘சபிக்கப்பட்ட இனம்’ என்று சொல்கிறேன்..
பசி, பைத்தியம், தனிமை, மரியாதை எல்லாவற்றையும் யுத்தம் பறித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே நிம்மதியாக வாழ முடியவில்லை, கண்களை இறுக்க மூடவும் முடியவில்லை. புலிகளுக்காக பேசுகிறேன் என் நினைக்க வேண்டாம். இந்த யுத்தத்தில் புலிகளின் பின்னடைவை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி மக்களின் மரணங்களை ஒரு பொருட்டாகவே நினைககமல் இந்தியாவின் துணையோடு அங்கு இன அளிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படுகொலைகள் ஈழத் தம்ழீனத்தையே அழித்து விடுமோ என்று தோன்றுகிறது. ஒரு பக்கம் புலம்புவவைத் தவிற என்ன செய்வதென்று தெரியாத சூழலில் மனதின் எங்க்கோ ஒரு ஓரத்தில் பழிவாங்குக் உணர்ச்சியும் எழுந்து வருகிறது.ஆமாம் அகிலன் இந்தியாதான் உங்களைக் கொன்ரு கொண்டிருக்கிரது.
இது உங்க அனுபவமா கற்பனையா தெரியலை… இதன் உண்மைத்தன்னையும் உறுதியில்லை…
ஆனால்….
தமிழராய் பிறப்பது குற்றம்…
வடக்கு கிழக்கில் பிறப்பது அதிலும் குற்றம்….
அந்த மண்ணில் வாழ்ந்தாலும் குற்றம் ….
அங்கிருந்து வெளியேறி இலங்கையின் வேறு பாகங்களில் வாழ்வது அதிலும் குற்றம்…
அடிமையாக வாழாதது குற்றம்…
வாய் திறப்பது குற்றம்…
ஊமைகளாக .. அடித்தாலும் கொன்றாலும் மெளனமாய் சாவதே சரியான வழி!!!
its toch my heart so badly all this year i don’t know whats going on in Jaffa. Its so sad but i belive one day we will have our freedom.
இதயத்தை தொடுவது போல் பேசுவது மட்டும்தான் நம்மால் செய்ய முடிந்த ஒரே விடயம்!!! அதைப் கார்த்து வருத்தப்படுவதுதான் உங்களால் செய்ய முடியும்!!! இந்த இரண்டையும் விட மூன்றாவதாக ஒரு வழியுள்ளது….
அது அகிம்சைப் போராட்டம் என்றோ…. தீக்குளிப்பென்றோ நம்மை நாமே அழித்துக் கொள்வது…
எதிரியின் கையில் அகப்பட்டு சின்னாபின்னமாகாமல் செத்து விடலாம்!!!
சுதந்திரம் என்ந கனவு இருந்தால் அதை அடியோடு அழித்துவிடுவதுதான் இனி உங்களுக்கு நல்லது;
நம்பி ஏமாறத் தேவையில்லையே!!!
🙁
ஈழத்துப் பாப்பா பாடல்
ஓடி மறைந்துகொள் பாப்பா – நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா – நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா
சிங்களப் படைகள்வரும் பாப்பா – வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் – மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா
சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா – எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா
பகைவனுக்கு வேண்டியது சண்டை – அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் – பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா
தெய்வமும் மறந்ததடி பாப்பா – வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா – இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா
யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா – குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா – நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா
காக்கை குருவிஎங்கள் ஜாதி – இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ – நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா – நம்
தலைவிதி இதுதான் பாப்பா
பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசிஸில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகை அணியக்கூடாது என்று ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்ட போது பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை வைத்தாராம். ம்… அதில் என்ன தப்பு இருக்குதப்பா? ஒரு தலைவன் தன் இனத்துக்கொரு பிரச்சனையென்றவுடன் தலையிட்டானே! அது அவன் கடமை. ஆறு கோடி தமிழர்களுக்கும் சீ சீ உலகத்தமிழர்க்கே தலைவன் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இருக்கிறாரே அவரை போலவா இருக்க வேண்டும். தயவு செய்து இனியாவது இந்திய அரசையோ சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருந்த வேற்றின அரசாங்கங்களை குற்றஞ்சொல்ல முற்படாதீர்கள். நமக்கு நாம் தான் எதிரி. துரோகங்கள், சுயநலம், அப்பப்பா தாங்க முடியலடா சாமி! இளிவுகெட்ட நம்மினத்திற்கு கிடைத்த சாபமே தவிர எதிரியின் நாசமல்ல.
Hey, great post, very well written. You should write more about this.