01.
நினைவுக்குள் மிதக்கிற
சிகரட் முத்தமும்
சாராயம் நெடிக்கிற
கச்சான் அல்வா உருண்டையும்
இன்றைக்கும் அவரிடமிருந்தது…
தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு
நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய்
கச்சான் அல்வாவைச் சொல்கிறார்…
எப்போதும் அவர்
இப்படித்தான் வருகிறார்..
நான் வளர்ந்ததை அப்பா அறியாரா
இல்லை வளர்ந்த பின்னான அப்பாவை
என் கனவுக்குத் தெரியாதா
பத்தொன்பது வருடங்கள்
கழிந்துவிட்டதென்றும்
என் முத்தங்களிற்கான
காரணங்களும்
அர்த்தங்களும் மாறிப்போயின என்பதையும்
அவருக்குச் சொல்வதாய்
தீர்மானித்த அன்றைக்கு உணர்ந்தேன்
அப்பாவரும் கனவுக்காய்
காத்துக்கிடக்கிற
குட்டிப்பையன் ஒருவன்
எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை
02.
பிரியத்தின்
சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.
தாகித்தலையும்
நம்
இறுதிப்பார்வைகள்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கிடையே
பற்றியிருந்த
விரல்கள்
இளகத்தொடங்குகையில்
வானம்
குமுறத்தொடங்கியிருந்தது
இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்
சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.
26.12.2008 ஆனந்த விடனில் வெளியான எனது இரண்டு கவிதைகள்.
நன்றி:ஆனந்தவிகடன்
வாழ்த்துக்கள் அகிலன்…
வாழ்த்துக்கள் அகிலன்..
அன்புடன் அருணா
>>குட்டிப்பையன் ஒருவன்
எனக்குள் ஒழிந்து கொண்டிருப்பதை>>
ஒளிந்து கொண்டிருப்பதை என எழுத எண்ணினீர்களா?
ஆமாம்.. அறிவன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. திருத்தியாகிவிட்டது..
//அப்பாவரும் கனவுக்காய்
காத்துக்கிடக்கிற
குட்டிப்பையன் ஒருவன்
எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை//
நானும் குட்டிப்பையனாய் தினமும்……………
வாழ்த்துக்கள் அகிலன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 🙂
வாழ்த்துக்கள் அகிலன்…
nalla erukuda……….
வாழ்த்துக்கள் அகிலன் உங்கள் படைப்புக்களை ஒரு பேப்பரிலும் படித்து இரசித்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் …
இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்//
அகிலன் கவிதையில் அணிகள் கரை புரண்டோடுகின்றன… இனிய இளகிய மொழி நடை… தொடருங்கள்… ஏக்கமும், எதிர்பார்ப்பும். பிரிவும் கலந்ததாய் கவிதகள் மனதை வருடுகின்றன….
அகிலனனி் கனவுகள் என்றாலே அது தென்றலில் மிதப்பது போன்றதொரு உணர்வைத் தரும். அதுபோல இக்கவிதைகளும்.
வாழ்த்துக்கள் அகிலன்.
சாந்தி
மிகத்தாமதமான அங்கீகாரம்தான்…
வாழ்த்துக்கள் அகிலன்…
//அப்பாவரும் கனவுக்காய்
காத்துக்கிடக்கிற
குட்டிப்பையன் ஒருவன்
எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை//
Very good
நல்ல அருமயான கவிதை வாழ்த்துக்கள் அகிலன்
பிரியத்தின்
சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.
தாகித்தலையும்
நம்
இறுதிப்பார்வைகள்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கிடையே
பற்றியிருந்த
விரல்கள்
இளகத்தொடங்குகையில்
வானம்
குமுறத்தொடங்கியிருந்தது
இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்
சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.
arputhamaan varigal…..
varthaikal illai paarata
நரைமயிர்கள் சற்றே தெரியத் தொடங்கிவிட்ட போதிலும் (எனக்கு),
இன்னமும் அப்பாவின் விரல் பிடித்து நடந்த நாட்களையும்,
ஆர்வமுடன் அவர் சொல்லும் விடயங்களைக் கேட்டதுவும்,
இன்னனமும் நினைவில் வர,
நெஞ்சம் விம்மும் குட்டிப் பையன்(கள்),
இங்குமுண்டு.
வாழ்த்துக்கள் அகிலன்.
உனது படைப்புக்கள் அதிகம் வெளிவரவேண்டும்
வாழ்த்துக்கள் அகிலன்.
எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும்..
உங்கள் எழுத்துக்களின் வலிமையும்,செறிவும் ரொம்பவே பிடித்திருக்கிறது..
உங்கள் படைப்புக்கள் அருமை..
nalla irrukkada
very very good. best of luck
excellent!
touch wood!