கடவுள்
ஒருநாள் எனது தெருவில்
எதிர்ப்பட்டார்.
என்னிடமிருந்த
தன் பிம்பங்களைளயெல்லாம்
அழித்தபடி..
ஒரு பிச்சைக்காரனின்
சில்லறைத்தட்டில்
திருடிக்கொண்டோடுபவனின்
புன்னகையில்
கடவுளின் சாயல் ஒளிந்திருந்ததனை
நான் கண்டேன்..
பிறகொரு நாள் மாலையில்
என் நிலைக்கண்ணாடியிலும்
அவரைப் பார்க்கநேர்ந்தது..
எல்லோரும்
நினைப்பது போலில்லை கடவுள்
அப்படியும் இருக்கலாம்..
இருக்கலாம்…
இருந்திருக்கலாம்.. 🙂
//கடவுள்
ஒருநாள் எனது தெருவில்
எதிர்ப்பட்டார்.
என்னிடமிருந்த
தன் பிம்பங்களைளயெல்லாம்
அழித்தபடி..//
நல்லாயிருக்கடா அகிலன், இந்த வரிகள்.
பிறகு, சிக்கின கடவுளை சும்மாவா விட்ட
எல்லோரும்
நினைப்பது போலில்லை கடவுள்
அப்படியும் இருக்கலாம்../
உண்மையாகவா??
உணமைதான். அழகு..
ஐயோ என்ன கொடிம சரவன் இரு ……லொல்