வாறான் வாறான் பூச்சாண்டி
ரயிலு வண்டியில
குழந்தைகளை பயங்காட்டுவதற்காக பூச்சாண்டிகள்.. பேய்கள்.. ஆவிகள் பிசாசுகள். அரக்கர்கள். இப்படி விதமான பாத்திரங்கள் உலவிக்கொண்டேயிருக்கிறது.. சிலவேளை நம்மிடையே வாழுகின்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள்.. குழந்தைகளைப் பயங்காட்டும் மனிதர்கள்.. இந்தா சயந்தன் மாமா வாறான் பிடிச்சுக்குடுத்திடுவன் எண்டு சொன்னாலே சில குழந்தைகள்.. சோற்றுருண்டையை முழுசா நேராக அடிவயிற்றுக்கே அனுப்பும்.. அச்சம் தான் மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கிறது.. குழந்தைகள் விதிவிலக்கா என்ன.. குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்கிற வார்த்தையை சொல்லாத அம்மாக்களே இருக்கமுடியாது எனக்கு சிலவேளை தோன்றும்.. ஒரு பாதி கும்பகர்ணண் மாதிரி அல்லது சின்னப் பீமசேனன் இருக்கிற குழந்தையை சுமக்க முடியாமல் இடுப்பில் வைத்துக்கொண்டு. ஒரு சட்டிநிறைய சோற்றைப்பிசைந்து பாத்துப்பாராமல் நாலஞ்சு முட்டையை அவிச்சுவைச்சு அதை அள்ளி அள்ளி குழந்தையின் வாயில் அடைத்துக்கொண்டே சில அம்மாக்கள் சொல்லுவார்கள் இவன் நாலு நாளா சரியா சாப்பிடயில்லை மெலிஞ்சிட்டான் எண்டு..
எனக்கொரு குட்டிப்பையனைத் தெரியும் உலகத்தில் இருக்கிற குட்டிப்பையன்கள் எல்லாரோடும் சிநேகமாகச் சொன்னால் கூட எனக்கு ஓம்தான்.. இவற்ற பேரே தவன் சுப்பையா..ஆனால் இவன் தனக்குத்தானே ஒரு பெயர் வைத்திருக்கிறான்.. பில்லா நயன்தாராவைப் பார்த்து இவன் இந்தப்பெயரை வைக்கவில்லை.. எல்லாம் அஜீத்தைப் பார்த்துத்தான்… இவன் அப்பாவை நச்சரித்து பில்லா படத்தை கிட்டத்தட்ட திரை அரங்கில் 20 தடைவைக்கு மேலும் திருட்டுவிசிடியில் தினமுமாக பார்த்துக்கழித்து வருகிறான்.. இன்றைய இரவிலும்.. பில்லா டி.வி.டி வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.. தம்பிக்கு என்னபேரப்பன் என்று யாராவது கேட்டால் பதில் வருகிறது பில்லா.. (இவர் இனி இங்கே பில்லா என்று அழைக்கப்படுகிறார்) இவர் திரை அரங்கில் 101 நாளாக ஓடிக்கொண்டிருந்த பில்லா படத்தில் நள்ளிரவுக்காட்சிக்கு போயிருந்தபோது விசிலடித்து ரசித்திருக்கிறார்.. அப்போது அந்தக் கண்கொள்ளாக் காட்சியை கண்டுரசித்த அஜித் ரசிகர்கள் தங்கள் தலயை 2030 இலும் கூட அசைக்க முடியாது.. அவருக்கு இந்த குட்டி வயசிலயே ரசிகர்களா என்று உணர்ச்சிவசப்பட்டு.. செய் ஏதாவது செய் என்கிற பாட்டு வரும்போது இவரது கைகளை கண்டோஸ்களால் நிறைக்க இவர் அதையெல்லாம் அதகளம் பண்ணியபடி 23 வது தடைவையாக அந்தப் படத்தை தூங்காமல் ரசித்தார்..
டேய் டேய் அடங்கடா எதுக்கிப்ப.. யாரோ ஒரு பையன் பில்லா படம் பார்த்தான் என்கிறது ரொம்ப முக்கியமா எங்களுக்கு என்று நீங்க திட்றது எனக்கு கேக்கிறது.. இவர் துப்பாக்கிகளை பில்லா கையாளுவதைப் பார்த்தோ என்னமோ.. இவருக்கு பூச்சாண்டிகள்..பிசாசுகள்.. அந்த தெருவில் இருக்கிற மனிதர்கள் யாராலும் இவரைக் கட்டுப்படுத்த முடியாது.. மற்றவர்கள் கதிரையில் இருக்கிற போதில் இவர் பிரிஜ்சுக்கு மேலயும்.. மூக்கொழுகிக்கொண்டிருக்கிறபோது ஐஸ்கிரீமுக்கும் அழுவதென்பது சர்வசாதாரணம். ஒரு முறை பிளேயரில் போடும் போது ஒரு டி.வி.டி ஸ்ரக் ஆகிவிட்டதென்பதற்காக இவர்.. தன் அப்பாவின் சேகரிப்பில் இருந்த அத்தனை டி.விடிக்களையும் தண்ணி வாளிக்குள் போட்டு சோப்புப்போட்டுக்கழுவியவர்.. இதற்கு மேலாக அவற்றை அக்காவுக்கு இவர் ஒரு இம்சை அரசன்.. இப்படிப்பட்ட வீர சாகசங்கள் செய்கிற பில்லாவை அடக்கும் வழியாக டேய் நீ பில்லா நான் பாட்சா என்று சொல்லிப் பார்த்தும் அடங்குகிற மாதிரித் தெரியவில்லை.. எந்தப் பெரிய சக்தியாலும் என் அவரது தாத்தாவின் மிகப்பெரிய மீசைக்கும் கரகரத்த குரலுக்கும் கூட பெப்பே காட்டிய இவரது வீரத்தை மெச்சி ஒரு காவியம் எழுதலாம் எண்டு தயாரான போதுதான்.. தமிழ் சினிமாவின் அந்தப் பெரிய அதிசயம் நிகழ்ந்தது.. கோலிவூட் ஹாலிவூட் பாலிவூட் ரொலிவூட் என்று வூட்டுக்கூரையைப் பிச்சுக்கொண்டு தசவதாரம் குதிச்சபோது பில்லாவின் வீரம் அடங்கிப்போனது.. இவர் துப்பாக்கிகளைப் பின்னால் பதுக்கிக்கொண்டே வாழ்க்கையில் தான் போயே இராத அம்மாவின் சேலைக்குப்பின்னால் ஒழிந்துகொண்டு எட்டிப்பார்த்தார்.. தசாவதாரம் படத்துக்கு இவரை அழைத்துக்கொண்டு போனபோது அடுத்த பத்தாவது நிமிசத்தில் தனக்கு முதலாம் நம்பர் வருதெண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி திரை அரங்கை விட்டு வெளியே வந்தவர். தன்னையும் அறியாமல்.. உவ்வா அவ்வா அது இதெண்டு ஏதோதோ முற்றுப்பெறாத மொழிகளில் புலம்பத்தொடங்கினார்.. என்னங்கடா இது பெரிய அதிசயமா இருக்குது பில்லாவாவது புலம்பறதாவது என்று விசயம் புரியாமல் நாங்கள் இருந்தபோதுதான்.. காதுக்குள் லவுட்ஸ்பீக்கரை வச்சு குய்யோ முறையோ எண்டு புரியாத சத்தங்களும் எப்ப எங்கிருந்து வரும் எண்டு தெரியாம திடீரென்று திரையைப்பிச்சுக்கொண்டு குரங்கு வாற கிங் காங் கையெல்லாம் சர்வசாதாரணமாகப் பார்க்கிற பில்லா தசாவதாரம் பட விளம்பரம் வந்த பேப்பரைப் பார்த்து பத்தடி விலகிப்போனபோது ரகசியம் மெல்லக் கசிய ஆரம்பித்தது..
அடடா இதென்ன கமலுக்கு வந்த சோதனை என்று பில்லாவின் வீரத்தை அளக்கும் கருவியாக நாங்கள் தசவதாரத்தை பயன்படுத்த தொடங்கினோம்.. முன்பு தன் அதிகார எல்லையை மீறி இவர் எங்கெங்கெல்லாம்.. அகலக்கால் பதித்திருந்தாரோ அங்கெல்லாம் தசாவதார படங்கள் ஒட்டப்பட்டன..
(இடைச்செருகல் ஒன்று: இவரது அப்பாவும் ஒரு இயக்குனர் இவரது அப்பா இயக்கிய படத்தின் புகைப்படங்களை விட தசாவதாரத்தின் படங்களே அவர்களின் வீடெங்கும் நிறைந்திருக்கிறது அதற்கு காரணம்இந்த மூன்று வயது பில்லாதான்)
காலக்கொடுமையில் பில்லா நடப்பதற்கு அவரது வீட்டிற்குள்ளேயே சுதந்திரம் இல்லாமல் போனது. இவர் அடிக்கடி சண்டைபிடிக்கும்.. ரி.வீ ரிமோட்டில் தசாவதாரகெட்டப் ஒன்றை ஒட்டியதில் இருந்து இவர்.. அதை நுனிவிரலால் கூடத் தொடுவதில்லை.. இவர் இதற்கு முன்பாக வீட்டுக்கு வருபவர்களுடைய கைத்தொலைபேசிகளையெல்லாம் வலுக்கட்டாயமாக பொக்கட்டுக்குள் இருந்து பிடுங்கியெடுத்து அதன் பட்டன்களையெல்லாம் தன் இஸ்டத்திற்கு அதகளம் பண்ணும் இவரது வன்முறையில் இருந்து தப்புவதற்காக இவரது வீட்டிற்கு வருபவர்கள்.. எல்லாரும் தங்களுடைய ரிங்டோனாக தசாவதாரம் பாடல்களையே வைக்கத்தொடங்க அதுவும் இவரால் முடியாமல்போனது.. நான் கூட எனது லாப்டாப்பில் தசாவதாரம் வால்பேப்பர்களையே வைக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாகவேண்டிவந்திருக்கிறது என்றால் பாருங்கோவன்..
தசாவதாரம் தனக்கு ஏற்படுத்திய கடுப்பில் இருந்து மீள்வதற்காக இவர் கமலுக்கு போட்டியாக பத்துக்கும் மேற்பட்ட வேடங்களை எந்த அமெரிக்க ஒப்பளையாளர்களும் இல்லாமல் தானாகவே வேடமிட்டுக்கொண்டு போஸ்களைக்கொடுத்திருக்கிறார்.. சொன்னாலும் சொல்லமுடியாது.. யாரும்.. இவரை 2020 ஹீரோவாக வெள்ளித்திரையில் வலம் வந்தாலும் வரலாம் என்ன இவருக்கு பிடிச்ச ஹீரோயின்.. பாவனாவோட நடிக்கமுடியாது.. அதொண்டுதான் பெரிய கவலையாயிருக்கும் இவருக்கு..
(இடைச்செருகல் இரண்டு: இது நிச்சயமாக தசாவதாரம் படத்துக்கான விமர்சனம் அல்ல கமலை இப்ப அவமானப்படுத்துறன் எண்டு அவர் சண்டைக்கு வரப்படாது..)
ம்.. என்ன செய்யிற சினிமா மக்களை அந்தப்பாடு படுத்துது. எனக்கும் லண்டன்ல ஒரு மருமகள் இருக்கிறாள். அவள் ரீவியில விஜயைக்கண்டால் ரீவியை நோக்கி ஓடுறாளாம் எண்டு ஒரே முறைப்பாடு.. அதுக்கும் மேல உங்க வெளிநாட்டில அப்பா மார் பிள்ளையளுக்கு இப்படிச்சொல்லித்தானாம் படிப்பிக்கிற.. இந்த முறை நீர் முதலாம் பிள்ளையா வந்தா (ஊர்ப்பழக்கம்) நான் இந்தியாக்கு கூட்டிக்கொண்டுபோய்..விஜய் மாமாவைக்காட்டுவன் எண்டு.. ஹி ஹி ஹி.. ம் அதான் வருங்காலக் கதாநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவம் எண்டு. எழுத மேட்டர் சிக்கேல்ல எண்டதை நானும் எப்படித்தான் சமாளிக்கிற.. ஆவ்……..
குழந்தைகள் சேட்டைகள் எப்போதுமே அழகுதான் , அகிலன் உங்களின் பதிவும் அதுபோல
எழுத மேட்டர் இல்லையென்றாலும் உங்களிடம் வார்த்தைகளுக்கு எங்கே பஞ்சம் வரப்போகிறது…
சின்னப்பெடியள் செய்யுற சேட்டைகள் அதகளம்தான்..
:))
அது சரி பாவனாவை பில்லாவுக்கு பிடிக்குமோ அல்லது அகிலனுக்கு பிடிக்குமோ…;)
எங்கடை ஊர் ஆக்ளுக்கு விஜய் தான் பிடிக்குது அதுன்ரை ரகசியம் என்னண்டு எனக்குத் தெரியல்லை…:)