01.
எரியுண்ட நகரத்தில்
இருந்து சேதிகள் வருவதற்கான..
கடைசி வழியையும்
நேற்று மூடினர்..
கொஞ்சமாய்க் கேட்டுக்கொண்டிருந்த
விசும்பல்களும் தேம்பல்களும் கூட
கேட்காது போகும் இனி..
கருவறையின்
கதவுகளிற்குப் பின்னால்
ஒழித்தபடி..
இடுக்குகள் வழியே
கடவுள் பார்த்துக்கொண்டிருந்தார்..
தனது பலிபீடத்தில் வழிந்துகொண்டிருக்கும்..
குருதியின் கொடும்பசுமையை
கடவுளின் பார்வை நடுங்கிக் கொண்டிருந்தது…
பதுங்குகுழிகளில் இருந்து
சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு..
குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்..
அந்நியர்களின்
காலரவங்கள் நொருக்கிய சருகோசைக்கு
மான்கள் பதகளித்துத்
திசைகளில் தெறித்தன..
சுடுகுழல்களின் வெடியோசை
புகுந்த நிலத்தின்
பூமரங்களில் நாளைக்கான
மொட்டுக்களும் இருந்தன
புத்தகங்களும்
கவிதைகளும் கூட..
எண்ணிக்கைகளைக் கூட மறந்துவிடலாம்
நாங்கள் எத்தனையாவது தடைவையாக
புதிய பட்டினங்களைச் சமைக்கிறோம்
என்கிற கவலைகள் ஏதுமற்று
காடுகளை வனையத்தொடங்குகிறோம்
திரும்பத் திரும்ப
காடுகள் இரக்கமுள்ளவை..
நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..
02.
இந்த இரவில்
திகிலுடன் தொடங்குமிந்த
துயர்க்கனவின் வேர்கள்..
ஒரு பதுங்குகுழியில் இருந்து முளைத்தது.
சல்லடை போடப்பட்ட
ஒரு சாப்பாட்டுப் பீங்கானில்
இன்னும் மீதமிருக்கிறது..
உலர்ந்து போன பருக்கையொன்று..
இன்றைக்குப் புதிய திசைகள்
புதியகாடுகள்..
புதிய பட்டினங்கள்
ஆனாலும் துயரங்கள் பழையவைதான்..
துப்பாக்கிகள் எல்லாக்கைகளிலும்
ஓரே வேலையைத் தான் செய்கின்றன..
துப்பாக்கிகள் தீர்மானிப்பதில்லை
கரங்கள்தான்..
எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
🙁
எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
🙁
//நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..//
மனசு நடுங்கிறது..
//எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை//
சாட்டையடி..
“””நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..”””
அகிலன் உங்கள் எதிர்பார்ப்பே எனதும். அயினும் பச்சையமும் செத்து எங்கள் மண் பாலையாக முதலாவது திரும்ப வேண்டும்.
– சாந்தி –
சோகம் விரவிப்போன சகோதர தேசத்தின் வலியை அழகாக கவிதைப்படுத்தியிருக்கிறீர்கள்.. வாசிக்கையின் மனது வலிக்கிறது..
//நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு//
சூழ்நிலையை அழகாக சொல்லும் இறுதி வரிகள்..
நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..
மிகவும் நல்ல வசனம் தம்பி
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..
அகிலன் நன்றாக இருக்குது…..
இனத்தின் அழிவில் அரசியல் செய்யும் கேவலம் எப்போது அழியுமோ!….
நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போக முதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..
நம்பிக்கைகள் எப்போதுமே அழிந்து விடாது அண்ணா! மிகவும் நன்றாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது அண்ணா!
‘இப்போது உலை மூட்டலும் வழி மறிப்பும் மட்டுமே!
விரைவில் பெரு நெருப்புப் புயல் வீசப் போகிறது!
‘அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும்!
இனிமேல் தான் பேரினத் தென்னிலங்கைக்கும்,
பேய்களின் அரசிற்கும் பெரும் புயல்,
பெரும் இடி எப்படி எனப் புரியும்?
”பெரு நெருப்பு ஆங்காங்கே இப்போது
சிறு சிறு கீற்றாய் வெடிக்கிறது!
இனித்தான் மிளாசி எரியவிருக்கிறது”!
”பெரு நெருப்புப் பீறிட்டு வீசுகையில்
ஊழிப் பேய்கள், சாத்தான்கள்,
மண் பிடி மமதையில் தவிக்கும் பொன்சேகப் புல்லுருவிகள்
அனைத்தும் அகப்பட்டுச் செத்துவிடும்!
தப்பி ஓட எவருக்கும் அங்கே
தனிப் பாஸ்போர்ட் கிடையாது!
ஓட வழி இன்றி(ச்) சுற்றி அடி விழும்!’