01.
காலம்
ஒரு கொடியகனவாயிற்று
உன் பிரியங்கள்
என்னை மீளெழுப்பின
உனது வார்தைகள்
எனது காயங்களை ஆற்றின
உன் பார்வைகள்
தொலைந்து கொண்டிருந்த
என்னைக் கண்டுபிடித்தன..
என்ன சொல்ல
எனது சாம்பர் மேட்டிலிருந்து
புதியமுளைகளை உருவாக்கும்
உனது புன்னகைகளை
என்னோடே விட்டுவிடு
நான் பிழைத்துப் போகிறேன்…
02.
நான் தயங்குகிறேன் மிகவும்
உன்
பிரியத்தின் சுவர்கள்
கண்ணாடிகளால் ஆனவையாயிருக்கையில்
கற்களை வீசிவிடக் கூடாதென்கிற தயக்கம் அது
உன்
காத்திருப்புக்களின் காலம்
சீக்கிரம் முடிந்து விடவேண்டும் என்றும்
அவர்கள் உன்னை நிராகரித்து
என்னிடமே அனுப்பிவிடட்டும் என்றும்
கெஞ்சிக்கொண்டிருக்கிறது ஆழ்மனம்
இதோ
இப்போது வெளியே பொழிந்து
கொண்டிருக்கும்
மழையைப் போன்றது
உன் பிரியம்
அது நின்று போகக் கூடாதென்றும்
என் வசிப்பிடம் அந்த
வெள்ளத்தில் மூழ்கிவிடட்டும்
என்பதாயும்
பிரார்த்திக்கத் தொடங்கியிருக்கிறது
மனசு
வழமை போலவே அருமையான கவிதை நண்பரே..
//இதோ
இப்போது வெளியே பொழிந்து
கொண்டிருக்கும்
மழையைப் போன்றது
உன் பிரியம்//
இந்த வரி எனக்கு பிடித்திருக்கின்றது.
உங்களின் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஒரு மழையை போல் இல்லாதிருக்கட்டும்.
//உன்
காத்திருப்புக்களின் காலம்
சீக்கிரம் முடிந்து விடவேண்டும் என்றும்
அவர்கள் உன்னை நிராகரித்து
என்னிடமே அனுப்பிவிடட்டும் என்றும்
கெஞ்சிக்கொண்டிருக்கிறது ஆழ்மனம்//
மீண்டும் அழகான கவிதை..
🙂
ஒவ்வொரு வரியும் பிரமாதம்..
🙂
இப்பொழுது நானிருக்கிற நிலையை எப்படிக் கண்டு கொண்டீர்கள் அண்ணன்…
//
உன்
காத்திருப்புக்களின் காலம்
சீக்கிரம் முடிந்து விடவேண்டும் என்றும்
அவர்கள் உன்னை நிராகரித்து
என்னிடமே அனுப்பிவிடட்டும் என்றும்
கெஞ்சிக்கொண்டிருக்கிறது ஆழ்மனம்
//
நானும்…
மனதுக்கு நெருக்கமாயிருக்கிறன்றன வரிகள்…
ம்…
பொடிச்சி என்ன ம்
really touchable poem…keep to write
மிக அருமையான கவிதை தோழரே..
இன்றைய பொழுது இனிதாய் புலர்ந்தது உமது கவிதையுடன்…
நிராகரிப்பின் வலியையும், பிரியத்தின் கிளர்ச்சிதனையும்
ஒருங்கே சொல்லுகின்ற வரிகள்..
அன்புடன்,
அருண்.
http://arun-nadesh.blogspot.com/