எந்தப் பூனையும்
என் ஜன்னலில் நின்று
அவசரமாய்க்
குதித்திறங்குவதில்லை
ஆளரவத்திற்கு
சூரியன்
ஒரு பொறாமை கொண்ட
அயல் வீட்டுக்காரனைப்போல்
எட்டிப்பார்க்கிறது
ஜன்னல் வழி
உடனும்
அவசரமாய் வெளியேறி விடுகிறது
குப்பையைப்போல்
தன் தகிப்பை
உள்ளே வீசி எறிந்துவிட்டு
பல்லிகள்
பெருகிவிட்ட இவ்வறையில்
மனிதனைத் தின்னும்
பல்லிகள் குறித்த
கனவின் பீதி நிறைய
பாதியில் திடுக்குற்று
விழிக்கிறேன்..
பல்லிகள்
விழித்திருக்கின்றன
என் தூக்கத்தைக்
காத்துக்கொண்டு.
கள் புளக்கில் பிரம்மியாவின் கவிதையைப்படியுங்களென்
கிட்டத்தட்ட நெருங்கிவாரமாதிரி இல்ல
எஸ்.சத்யன்
கள் முகவரி
http://www.kallmag.blogspot.com
கனவுகளின் பயங்கரம்..
அப்படியா சத்யன்….
பார்க்கிறேன் கிட்ட வந்தால் என்ன செய்வது.
நன்றி சரவணகுமார் என் எல்லாக் கவிதைகளையும் படிக்கிற ஒரே ஆள் நீங்கதான்
பல்லிகள் குறித்த
கனவின் பீதி நிறைய
பாதியில் திடுக்குற்று
விழிக்கிறேன்..
பல்லிகள்
விழித்திருக்கின்றன
என் தூக்கத்தைக்
காத்துக்கொண்டு.
இது ரொம்ப நல்லாயிருக்கு அகிலன் நானும் படிச்சிட்டேதான் இருக்கேன் 🙂