நான் ஒரு தீவிரமான கலாச்சார விரும்பி என்கிற தவறான புரிதல் ஏற்பட்டு விட்டது. ஆனால் எனக்கு குட்டைப்பாவாடைகளையும் பிடிக்கும். குட்டைப்பாவாடைகளிற்கு ஒரு அபரிமிதமான சக்தி இருக்கிறது. அது ஸ்ரேயா அணிந்தாலும் சரி த்ரிசா அணிந்தாலும் சரி. எப்போதும் அவற்றின் மீதான மோகம் குன்றாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை வலைப்பதிவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பாலாபாயிடம் கேட்டால் அரைமணிநேர வகுப்பே எடுக்கிறார்.
எனது வலைப்பதிவுகள் கலாச்சாரமானவை என்று ஒரு நண்பர் சொன்னார். வலைப்பதிவுகள் நிச்சயமாக ஒரு குட்டைப்பாவாடை (மினி ஸ்கேட்) ரேஞ்சிலதான் இருக்கவேண்டும். நீங்கள் எழுதுவது சேலை ரேஞ்சிற்கு இருக்கிறது என்று இன்னொருவர் சொன்னார். ஒரு வழியாக நட்சத்திர வாரத்தை முடித்து விட்டேன். நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் நான் போஸ்;ட் போட்டுக் கொண்டேயிருப்பேன் என்கிற பிடிவாதத்தை தளர விடவேயில்லை. நீண்டகாலத்திற்கு பிறகு எழுதக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டேன், அவ்வளவுதான். பின்னூட்டங்கள் ஹிட் கவுண்டருகள் குறித்த கவலைகள் எல்லாம் இருக்கவில்லை (விழுந்தாலும் மீசையில மண் படயில்லை). மற்றபடி நான் எழுத நினைத்தவைகளை எழுதி முடித்திருக்கிறேன். அவ்வப்போது எட்டிப்பார்த்த நண்பர்களிற்கு நன்றி. இந்தத் தலைப்பைக் கண்டதும் ஓடிவந்து உள்ளே விழுந்த அத்தனை பேருக்கும்….. அதைவிட நன்றி. இப்படிக் கூப்டாதானே நீங்க விழுந்தடிச்சு வர்றீங்க…
என் எல்லாப்பதிவுகளும் சேலை மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டு இருப்பதாக கவலைப்படுகிறவர்களிற்காக இந்த மினிஸ்கேட் பதிவு. அடுத்து வருகிற நட்சத்திரத்திர நண்பருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பளித்த தமிழ் மணத்திற்கு நன்றி.
குறிப்பு
01.
நான் எதிர் பார்த்த ஆள்கணக்குக்கு இன்னும் கொஞ்சப் பேர் வரவேண்டிய தேவையிருந்தது. அதால தான் ஸ்ரேயாவையும் திரிசாவையும் துணைக்கழைக்க வேண்டியதாயிற்று. (எல்லாம் ஹிட் கவுண்டர் ஆண்டவன் செயல்) இந்த பதிவின் ஆரம்ப வரிகளில் நமீதாவைச் சேர்க்கவில்லை அதனால் நமீதா என்னை மன்னிப்பாராக. ((குட்டைப்பாவாடைப்)மினி ஸ்கேட் பதிவுகள் இப்படித்தான் இருக்குமோ …… ஒன்றுமே இல்லாமல்)
02.
என் மற்றெல்லாப் பதிவுகளையும் விட ஒன்றுமில்லா இந்தப் பதிவுக்குதான் அதிகம் பேர் வருகை தருவார்கள் என்பதை சொல்லியா தெரியவேண்டும் வாழ்க வலையுலகம் மற்றும் நமீதா ரசிகர்கள் அனைவரும்
இப்பதான் வலைப்பதிவு இடுகையொன்றை எழுதியிருக்கிறீர்கள் – வாழ்த்துக்கள் – தொடர்ந்தும் எழுதவும் – சான்சே இல்லை – தூள் –
இடுகையொன்றின் பின்னூட்டமும் இப்படிதான் இருக்கும்
////கொழுவி
இப்பதான் வலைப்பதிவு இடுகையொன்றை எழுதியிருக்கிறீர்கள் – வாழ்த்துக்கள் – தொடர்ந்தும் எழுதவும் – சான்சே இல்லை – தூள் -இடுகையொன்றின் பின்னூட்டமும் இப்படிதான் இருக்கும் ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே….
திருப்தியா….. ர்ப்படியெல்லாம் பதிவுக்கெல்லாம் கூப்பிடுறாங்க..
நட்சத்திர வாரம் சரியாகப்பொருள் பெற்றிருக்கிறது மற்றொரு முறை அகிலன் மூலமாக உங்களோடு நிறையக்கருத்துகள் பரிமாறவிருக்கிறது அகிலன் நிறையப் பேசலாம் ஆனால் மிகசொற்பமாகவே பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்…
பல சொற்களை,பழக்க வழக்கங்களை சில வருடங்கள் கழித்து ஞாபகப்படுத்தி இருக்கிறீர்கள்…நன்றி
நான் காதலும் அதன் வலியோடும் அல்லது காதல் மட்டுமான பதிவொன்றை எதிர்பார்த்தேன் நட்சத்திர வாரத்தின் இறுதியல் பரவாயில்லை வெகு விரைவில் பதியவும்…
நன்றி அகிலனுக்கும் தமிழ் மணத்திற்கும்.
அகிலன் தொடர்க உங்கள் பயணம் வாழ்த்துக்கள்…
கொழுவிsaid…
///இப்பதான் வலைப்பதிவு இடுகையொன்றை எழுதியிருக்கிறீர்கள் – வாழ்த்துக்கள் – தொடர்ந்தும் எழுதவும் – சான்சே இல்லை – தூள் –
இடுகையொன்றின் பின்னூட்டமும் இப்படிதான் இருக்கும்////
ரிப்பீட்டு…
தமிழ் மண பதிவர்களை சரியாப்படிச்ச யாரோ தகவல் தந்திருக்கிறார் உங்களுக்கு….
நான் எதிர் பார்த்த ஆள்கணக்குக்கு இன்னும் கொஞ்சப் பேர் வரவேண்டிய தேவையிருந்தது. அதால தான் ஸ்ரேயாவையும் திரிசாவையும் துணைக்கழைக்க வேண்டியதாயிற்று. (எல்லாம் ஹிட் கவுண்டர் ஆண்டவன் செயல்) இந்த பதிவின் ஆரம்ப வரிகளில் நமீதாவைச் சேர்க்கவில்லை அதனால் நமீதா என்னை மன்னிப்பாராக.
//((குட்டைப்பாவாடைப்)மினி ஸ்கேட் பதிவுகள் இப்படித்தான் இருக்குமோ …… ஒன்றுமே இல்லாமல்)///
அகிலன் இப்படியெல்லாம் பதிவு போடுவிங்களா நீங்க… கலக்கல் தல…
///என் மற்றெல்லாப் பதிவுகளையும் விட ஒன்றுமில்லா இந்தப் பதிவுக்குதான் அதிகம் பேர் வருகை தருவார்கள் என்பதை சொல்லியா தெரியவேண்டும் வாழ்க வலையுலகம் மற்றும் நமீதா ரசிகர்கள் அனைவரும்///
நான் நமீதா ரசிகன் கிடையாது ஆனா மற்ற இரண்டு பெயர்களும் எனக்கு நல்லா தெரியும்…:):)))
நீங்க சொன்ன மாதிரி ஒரு கும்மிப்பதிவுக்கு நான் சில எண்ணிக்கைகளை தந்திருக்கிறேன் போதுமா…
ஒரு திரிஷா படமோ அல்லது ஸ்ரேயா படமோ போட்டிருந்தா இன்னும் கொஞசம் பேர் கூட வந்திருப்பினம் அகிலன் …
நமீதாவைப் பற்றி எழுதியிருப்பிங்க எண்டு வந்து, சரியா ஏமாந்திட்டன் 🙂
//நீண்டகாலத்திற்கு பிறகு எழுதக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டேன், அவ்வளவுதான். //
இந்த வாரம் அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உங்கட எழுத்தைப் படிக்க வாய்ப்பளித்ததுக்கு நன்றி…!
//என் மற்றெல்லாப் பதிவுகளையும் விட ஒன்றுமில்லா இந்தப் பதிவுக்குதான் அதிகம் பேர் வருகை தருவார்கள் என்பதை சொல்லியா தெரியவேண்டும் வாழ்க வலையுலகம்//
ஹீ ஹீ ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல இருக்கு.
//இந்தத் தலைப்பைக் கண்டதும் ஓடிவந்து உள்ளே விழுந்த அத்தனை பேருக்கும்….. அதைவிட நன்றி. இப்படிக் கூப்டாதானே நீங்க விழுந்தடிச்சு வர்றீங்க//
வருத்தமான உண்மை தான்.
//வலைப்பதிவுகள் நிச்சயமாக ஒரு குட்டைப்பாவாடை (மினி ஸ்கேட்) ரேஞ்சிலதான் இருக்கவேண்டும். நீங்கள் எழுதுவது சேலை ரேஞ்சிற்கு இருக்கிறது என்று இன்னொருவர் சொன்னார்//
அனுபவஸ்தர் சொல்லி இருக்கார் சரியா தான் இருக்கிறது.
//நான் எதிர் பார்த்த ஆள்கணக்குக்கு இன்னும் கொஞ்சப் பேர் வரவேண்டிய தேவையிருந்தது. அதால தான் ஸ்ரேயாவையும் திரிசாவையும் துணைக்கழைக்க வேண்டியதாயிற்று//
நீங்க நினைத்தது கண்டிப்பாக நண்டந்து இருக்கும்.
oru nameetha photo poturundha innum sooda irundhirukkum……hee hee hee
இதைவிட அதிகமா உங்கLiடம் இருந்து எதிர்பார்க்கிறோம்:-))
Hi..
I expected some Namidha Pictueres. I am missing something here..
Aha..
அகிலன்
:((((((((((((((((((((((((((((((((((((((((((
கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் இருந்த உங்களுக்கு திடீரென குட்டைப் பாவாடையின் நினைப்பு படைப்புனள் தொடரட்டும்