அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
பாடலின்
திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்
நான் அலைந்து
கொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.
அகிலன்
வலைப்பக்கம் மிக அழகாக உள்ளது.
அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
இந்த வரிகளை மெய்ப்பித்தவண்ணம் முகப்புத் தோற்றம் உள்ளது.
மீண்டும் உங்களுடைய பதிவைக் காண்பது மகிழ்ச்சி தருகிறது.
கவிதை மிக அருமை. மற்றும் எல்லா பதிவுகளும் மிக மிக நன்றாக உள்ளது.
http://ennmanasu.blogspot.com/
உங்கள் அனைத்து கவிதைகளும் நினைவில் நின்றன.. நினைவுகளை கிளறின.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்..
உங்கள் ஒவ்வொரு கவிதைகளுக்கும் மறுமொழியிடலாம் “அழகாயிருக்கிறதென்று, மனதை வருடுகிறதென்று.. நினைவுகளை கிளர்ந்தெழ செய்ததென்று.. நிஜங்களை பிரதிபலிக்கிறதென்று..”
அத்தனையும் அருமை..