“இயற்கையுடன் இணைந்த கிராமத்தில் அம்மம்மாவிடம் வளர்ந்தேன்.தனிமையும் சுதந்திரமும் அப்பாவின் அடக்குமுறைகளும் அற்ற இனிய சிறுபருவம். அம்மம்மாவின் நிழலில் கிடைத்தது. அந்தச் சூழல் கற்பனைகளையும் கவிதைகளையும் எனக்கு தந்தது. 90 களின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்தேன் அங்குப் பெற்ற அனுபவங்கள்தான் பின்னர் நானெழுதிய கவிதைகளுக்கு அடித்தளமாயின”
என்று கூறும் பஹீமாஜகான் இலங்கை மெல்சிரிபுரவைத்ச் சேர்ந்தவர்.கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார்.குறைந்த எண்ணிக்கையிலான. ஆனால் காத்திரம் நிறைந்த கவிதைகளைப் பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ள இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இது.
தலைப்பு: ஒரு கடல் நீரூற்றி
எழுதியவர்: பஹீமா ஜகான்
வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்
விலை: 40.00
தொகுதியில் இருந்து எனக்கு நெருக்கமான வரிகள்:
‘அவசரப்பட்டு நீ
ஊரைக்காணும் ஆவலிலிங்கு வந்து விடாதே.
வதைத்து எரியூட்டப்பட்டசோலைநிலத்தினூடு
அணிவகுத்து செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப்பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே’
அறிமுகத்திற்கு நன்றி அகிலன்..கூடவே தொகுதிக்குரியவருக்கு வாழ்த்துக்களும்…
‘ஒரு கடல் நீரூற்றி’வாசித்தேன் அகிலன். நன்றாக வந்திருக்கிறது. அதில் ‘இரகசியக் கொலையாளி’யும், ‘எனது சூரியனும் உனது சந்திரனும்’ ஆகிய இரு கவிதைகளும் மிகப் பிடித்தன. நீங்கள் ஒரு விமர்சனம் எழுதுங்களேன் அகிலன்.
ம் என்னை வம்புல மாட்டப்பார்க்கிறீங்க என்ன?.
ஆமாம்.தேவதைக்கனவுகளும்,யௌவனக்காதலுமற்ற தேசத்தின் துயர்களை முகத்திலறைகிறது இவரது கவிதைகள்.அவரது ஆரம்ப காலம் தொட்டு நீண்ட கால வாசகன் நான்.
90களின் பிற்பகுதியில் நிறையக் கவிதைகள் எழுதிய இவர் போகப்போகக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினார்.அவரது கவிதைத் தொகுப்பு வெளிவருவது குறித்து மிகப் பெரும் மகிழ்ச்சி.வாசிக்க ஆவலாயுள்ளேன்.மிக்க நன்றி திரு.அகிலன்.
வாங்க ரிஷான் முதல்தடவை நம்மவூட்டுக்கு வந்திருக்கிறீங்க இன்னமும் பஹீமா அக்காவின் கவிதைகளைப்படிக்கிறவராய் ரசிக்கிறவராய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
”உனக்கு பிடித்த வரிகள் எனக்கும் பிடிக்குமே.”
அகிலன் வாழ்த்துக்கள்.