01. 25.02.2009 (முன்) நமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன நமக்குச் சொந்தமற்ற செவிகள். பீறிட்டுக்கிளம்பும் சொற்கள் பதுங்கிக் கொண்டபின் உலர்ந்து போன வார்த்தைகளில் நிகழ்கிறது. நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும் உன் ஒப்புதல் வாக்குமூலம். வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது நீ எச்சிலை விழுங்குகிறாயா? எதைப்பற்றியும் சொல்லவியலாச் சொற்களைச் சபித்தபடி ஒன்றுக்கும் யோசிக்காதே என்கிறாய்.. உன்னிடம் திணிக்கப்பட்ட துப்பாக்கிகளை நீ எந்தப்பக்கமாகப் பிடிப்பாய் வாய் வரை வந்த கேள்வியை…
என்னிடம் நிறைவேறாதஇக்கவிதையின்பின்னரும்தேங்கிக்கிடக்கும்வார்த்தைகள்உனக்காய்…. மின்சாரமற்ற ஒரு நாளின் இரவைகுண்டுச்சத்தங்கள்நிறைத்தன.அமைதியும் தூக்கமுமற்றஅப்பொழுதுகளைநீ மீளவும் தருகிறாய்…. காற்றில் தொலைந்துபோனகைவிளக்கின் ஒளியோடுபோயின உனது பாடல்கள். உனது பாடல்களைமீட்கவும்……. காற்றில் தொலைந்து போன கைவிளக்கின் ஒளியைக்காணவுமாய்நீள்கிறது என்காத்திருப்பு… எனக்கு அப்போது தெரிந்திருந்தது தூங்காதிருக்கவும்காத்திருக்கவும்விளக்கின் ஒளியையும்உனது பாடல்கள் குறித்தும் த.அகிலன்
சொதப்பலா ஒரு கவிதை போட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன. கென் அண்ணா இதைத்தான் குப்பையில் வைரம் என்கிறதா.
//*தனித்து நடக்கும் இரண்டு பாதங்களைக் கவனியாத சகபயணியாய் நீள நடக்கிறது தெரு மெளனியாய்….*//
நல்ல ஒப்புமை…
நான் ஒரு நேரந்தப்பிய பயணியைப்போல் காத்திருக்கிறேன் தூரத்தெரியும் ஒளிப்புள்ளிகளை நம்பியபடி…” நல்ல வரிகள். ”தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பானது கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாக தவிர்த்து வருகிறேன் மரணத்தை கானல் நீராய் இருப்பின் அதை என்னிடம் தெரிவிக்க வேண்டாம்”என்று எப்போதோ படித்த வரிகளின் வலி இதிலும் இருக்கிறது.வாழ்த்துக்கள்..
வாங்க அன்னியன் நம்ப வீட்டுக்கு முத தடைவையா வந்திருக்கீக நன்றி. நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகள் தான்பிரீன் தொடரும் பயணம் என்கிற ரஸ்ய நாவலில் வந்ததா?.. ஏனேனில் எனக்கும் படித்த ஞாபகம்.
பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்….
Nalla uvamai vaazthukal agilan
சொதப்பலா ஒரு கவிதை போட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன. கென் அண்ணா இதைத்தான் குப்பையில் வைரம் என்கிறதா.
//*தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்….*//
நல்ல ஒப்புமை…
நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி…”
நல்ல வரிகள்.
”தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பானது கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாக தவிர்த்து வருகிறேன் மரணத்தை கானல் நீராய் இருப்பின் அதை என்னிடம் தெரிவிக்க வேண்டாம்”என்று எப்போதோ படித்த வரிகளின் வலி இதிலும் இருக்கிறது.வாழ்த்துக்கள்..
வாங்க அன்னியன் நம்ப வீட்டுக்கு முத தடைவையா வந்திருக்கீக நன்றி.
நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகள் தான்பிரீன் தொடரும் பயணம் என்கிற ரஸ்ய நாவலில் வந்ததா?.. ஏனேனில் எனக்கும் படித்த ஞாபகம்.