01. அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார் நினைவுக்குள் மிதக்கிற சிகரட் முத்தமும் சாராயம் நெடிக்கிற கச்சான் அல்வா உருண்டையும் இன்றைக்கும் அவரிடமிருந்தது… தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய் கச்சான் அல்வாவைச் சொல்கிறார்… எப்போதும் அவர் இப்படித்தான் வருகிறார்.. நான் வளர்ந்ததை அப்பா அறியாரா இல்லை வளர்ந்த பின்னான அப்பாவை என் கனவுக்குத் தெரியாதா பத்தொன்பது வருடங்கள் கழிந்துவிட்டதென்றும் என் முத்தங்களிற்கான காரணங்களும் அர்த்தங்களும் மாறிப்போயின என்பதையும்…
Month: December 2008
நான் கடவுள்..
கடவுள் ஒருநாள் எனது தெருவில் எதிர்ப்பட்டார். என்னிடமிருந்த தன் பிம்பங்களைளயெல்லாம் அழித்தபடி.. ஒரு பிச்சைக்காரனின் சில்லறைத்தட்டில் திருடிக்கொண்டோடுபவனின் புன்னகையில் கடவுளின் சாயல் ஒளிந்திருந்ததனை நான் கண்டேன்.. பிறகொரு நாள் மாலையில் என் நிலைக்கண்ணாடியிலும் அவரைப் பார்க்கநேர்ந்தது.. எல்லோரும் நினைப்பது போலில்லை கடவுள் அப்படியும் இருக்கலாம்..
இலியானாவும் இன்னும் சில பிகர்களும்..
பொதுவாக காஸ் குக்கருக்கு மருமகள்களுக்குத்தான் பயம் வரவேண்டும்.. ஆனால் எங்கட வீட்டில் மாமிக்கு பயம் வந்திருக்கிறது. நானும் கடந்த இருபது நாளாக காலமை எழும்பினோண்ண முதல் வேலை அடுப்பு மூட்டுறது.. நீங்கள் யாரவது உங்கட வீட்டில விறகடுப்பு மூட்டியிருக்கிறியளோ.. அது ஒரு தனிக்கலை.. என்னைக்கேட்டால் நான். அதை 65 வது கலையாக சேர்க்கச் சொல்லி சிபாரிசே செய்வன்.. சமையல் கலையுக்குள்ள கடைசி வந்தும் இதைச் சேக்கமுடியாது.. ஆனா இங்க நான்…