01. எரியுண்ட நகரத்தில் இருந்து சேதிகள் வருவதற்கான.. கடைசி வழியையும் நேற்று மூடினர்.. கொஞ்சமாய்க் கேட்டுக்கொண்டிருந்த விசும்பல்களும் தேம்பல்களும் கூட கேட்காது போகும் இனி.. கருவறையின் கதவுகளிற்குப் பின்னால் ஒழித்தபடி.. இடுக்குகள் வழியே கடவுள் பார்த்துக்கொண்டிருந்தார்.. தனது பலிபீடத்தில் வழிந்துகொண்டிருக்கும்.. குருதியின் கொடும்பசுமையை கடவுளின் பார்வை நடுங்கிக் கொண்டிருந்தது… பதுங்குகுழிகளில் இருந்து சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு.. குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்.. அந்நியர்களின் காலரவங்கள் நொருக்கிய சருகோசைக்கு மான்கள் பதகளித்துத்…
Month: October 2008
காதல் சிலுவையில் 05
இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில் ஒளிந்துகொண்டிருப்பதாய் படுகிறதெனக்கு.. நீ ஒரு குட்டிப்பெண்.. சில சமயம் அம்மா.. என் திசைகளில் படர்ந்த இருள் நீ விலக்கியது….