என்னிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. நான் நினைக்கிற காரியம் நடக்குமா என்பதை அறிந்து கொள்ள.. பூவா தலையா போட்டுப்பார்ப்பதைப்போல.. நான் போகிற பாதையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை மூச்சே விடாமல் கடந்து பார்ப்பது மூச்சு விடாமல் கடந்தால் அந்த காரியம் வெற்றி.. இடையிலே மூச்சை விட்டு விட்டால் அந்த காரியம் தோற்றுவிடும் என்று நான் நம்பி வந்தேன்.. என்னிடம் அந்த விநோதமான பழக்கம் இருந்தது என்று சொல்வதன் மூலம்…
Month: July 2008
புன்னகையின் ஒளியரும்புகள்..
உன் புன்னகையின் ஒளியரும்புகள் மறையத் தொடங்கிவிட்டன பின்னலின் உட்குழிவுகளில் உதிர்ந்து தேங்கிவிட்ட ஒற்றையிதழைப் போல் சிக்கிக் கொண்டிருக்கிறது என் பிரியம் நான் வேண்டிக்கொள்கிறேன் பின்னலைத் தளர்த்துகையில் எப்போதும் போல அவற்றைப் பத்திரப்படுத்தாதே. அது இப்போது அன்பின் வாசனையையும் உயிரையும் இழந்துவிட்டது என்பதனை அறி.