அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த விசயத்தை சொல்லியிருப்பாவோ? என்னவோ? ஆழ்வார்ப் பேட்டை…
Month: May 2008
நட்சத்திர வணக்கம் அல்லது கணிணிக்கு காணிக்கை
இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இதே மேமாதத்தின் ஏதோ ஒரு நாளில் நான் முதல் முதலாக கணிணியைத் தொட்டிருக்கிறேன். ஒரு பொருத்தத்திற்காக மே மாதம் என்று சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் உண்மையிலேயே அது அப்படித்தான் நடந்தது. எங்களிற்கு பிசிக்ஸ் படிப்பிச்ச வாத்தியாரான அல்லது நண்பரான பிரதீப் என்றவருடன் நான் 2004 ஏப்ரல் ல நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் தான் நான் அது வரை கண்காட்சிகளில் மட்டுமே பார்த்து…
பிரியம் /02
வரைபடங்களிளில்லாத உலகிற்கு அழைத்துப் போகும் உனது காலடிகளோடு வருவதற்குத் திராணியற்றுத் தொய்கிறது உடல். காலடிகளைத் தவறவிடாத தனிப் படபடப்புடன் பின் தொடர்கிறது மனம். கடல் ஒரு விரோதியைப் போல் உனது காலடிகளைத் திருடிக்கொண்டிருக்கிறது எனக்கு முன்பே.