ஏய்!!!!!!!சர்புர் என்று பறக்கும் டாடாசுமோக்கள்.. மற்றும் இதர கறுத்தக்கலர் புதியவாகனங்கள் எல்லாம் டயர் கிறீச்சிட நிற்க மூட்டை மூட்டையாய் குண்டர்களோடு வந்து இறங்குகிறார் வில்லன். சோவெனக் கொட்டுகின்ற மழை சட்டென்று ஒரு கொலை. முதல் 2 நிமிடத்திலேயே வெறுத்து விட்டது எனக்கு அடடா தெரியாம நுழைஞ்சுப்புட்டியேடா… இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை…
Month: September 2007
சொற்களைத் திருடிய வண்ணத்திகள்….
நான்கு சுவர்களும்மௌனித்திருந்த ஒருநாளில்எதை எழுதுவதுஎனத் தெரியாது விட்டு வைத்தஎன் நாட்குறிப்பின்இப்பக்கங்களில்இப்போது நான்உன் மௌனத்தை எழுதுகிறேன். உன்மௌனம்….ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கியகுரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது…. உன்கண்களிடமிருந்துவண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்டஅந்த முத்தத்தின் முடிவில்..நமக்கான சொற்களையும்திருடிக்கொண்டு…தம் சிறகுகளால்காலத்தை கடந்தன வண்ணத்திகள்… என்ன சொல்வதுஉன்மௌனங்களைப்பற்றிஎழுத நேர்கையில்முத்தங்களைப் பற்றியும்எழுதவேண்டியிருப்பதை….
சாத்தானுடன் போகும் இரவு
சாத்தான்கள்ஊருக்குள்திரும்பின.சாத்தான்கள் எப்போதும்புன்னகைகளைவெறுப்பவை.. பகலின் நிறம் மரணம்இரவின் நிறம் பயம்என்றாகியதுநாள். ஊர்பகலில் இறந்தவனைஅடக்கம் பண்ணிவிட்டுஇரவில் அடுத்தசாவிற்குகாத்திருக்கலாயிற்று. பாதித்தூக்கத்தில்அடித்து எழுப்பப்பட்டவெறியில்அலைந்தன சாத்தான்கள். இரவுக்குக் கைகள்முளைத்தது.., கேள்விகளற்றவெறுங்கணத்தில்இரவின் கரங்களில்கோடரிகள் முளைத்தன.., மனிதர்களைத்தறித்து விழுத்தியபடிதனது நிறத்தைஊரெங்கும் பூசிச்செல்கிறதுஇரவு விடியலில்உருவங்களின் கரங்களில்இருந்ததுஇரவின் கோடரி. சூரியனைப்போர்த்தபடிகேள்விகளற்றுநடந்துபோகிறதுஇரவு சாத்தானுடன்.