“வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சிஉள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி “நானொரு சிந்து காவடிச்சிந்து”இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம். அப்பல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை சின்னக்கா எப்பவும் ஒரு கை விளக்குமாறு கையில வைச்சுக்கொள்ளுவா. நாங்கள் எல்லாரும் சந்தோசமா அவவுக்கு பின்னாலதிரிவோம். புல்லு பத்தை எண்டு ஒரு வண்ணாத்திப்பூச்சியையும் விடாமல் அடிப்பம் அடிச்சு…
Month: October 2006
முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)
ஒளிப்படம்- கஜானி)நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ…இன்னும்….. இதில் யார் அது தெரிகிறதா த.அகிலன்
மரண தண்டனையும் மண்ணாங்கட்டியும்
என் அன்னலச்சுமி போனதுக்கப்பறம் எனக்கு வாழ்க்கையில பிடிப்பில்லாமபோச்சு ஆனா மரணதண்டனையை விலக்கினாங்கண்ணா நான் நல்ல மனுசனா வாழமுயற்சி செய்வேன்… அட இது என்னுதில்லீங்க விருமாண்டியோடது. ஏன் நான் இதை சொல்றேன்னா தமிழ்மணத்தில நானும் பார்க்கிறேன் கொஞ்சநாளா எல்லோரும் மரணதண்டனை மரணதண்டனை எண்டு ஒரே மரணதண்டணை மயமாப்போச்சு நானும் என் பங்குக்கு எதையாவது போட்டுத்தாக்க வேண்டாமா அதான் கோதாவுல இறங்கிட்டேன். கமல்ஹாசன் தனது விருமாண்டி படம் மரணதண்டனைக்கு எதிரானது என்று சொன்னாலும்…