எல்லாவற்றையும்உன்னுள்ளே குமைத்துஏன்நீமௌனம் சமைக்கிறாய். எல்லாவினாவுதல்களின் போதும்உன்புன்னகைக்குள்எதனை நீசொல்லநினைக்கிறாய் ஒலிகள் எதுவுமற்ற உனது மொழிஇரைச்சலை ஜெயிக்குமா? அடுத்தவனையே பேசுபொருளாக்கிஎப்போதும்அலைகிறது உலகம். அதனாலும்மௌனம் நிறைவுதான்ஆனால்சலசலப்பேசங்கீதம் என்றாயிற்று. ஏது சொல்ல மௌனம்ஒரு மின்சாரத்தைப்போலபாதைகளைப்பற்றியஅக்கறைகளற்றுப் பயணிக்கும்வேகமாய். எப்போதும்மொட்டுக்களின்மௌனம் உடைகையில் தான் அழகு நீபேசுகண்ணிவெடிகளின்நிலத்தில் நடப்பதைப்போல்சற்றே அசந்தாலும்காத்துக்கிடக்கிறது இரைச்சல்உனக்கான வார்த்தைகளை ஓலமிட.. த.அகிலன்
Month: July 2006
மீள் நினைவு
ஒரு பேனாவைப்போல்எப்போதும்கொட்டிவிடத்தயாராய்என்னுள்நிரம்பிவிட்டிருக்கும்ஞாபகங்கள்…… சின்னதாய்ஓர்எறும்பின் ஊரல் கொஞ்சம்நளினமாய் மோதும்மெல்லியகாற்று ஏன்? ஒரு தேனீர்க்குவளையின் ஒரம் கூடப்போதுமானதாயிருக்கும் ஞாபகங்களைக்கிளறி விடுவதற்கு.. இன்னமும்என்னுள்புருவம் சுருக்கிபார்த்துக்கொண்டேயிருக்கிறாய்நீ. மறுபடியும்மீன்தொட்டிஉடைந்து நொருங்குகிறதுமனசுள்; நான்மூடிவைத்துவிடுகிறேன்பேனாவைமீண்டும்ஏகாந்தத்தில் இருந்துஇறங்கும்மனசுஇயல்பிற்கு….
வீடு அல்லது அக்கராயன்
கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கும்மழை.. மேலோடுதடவிப்போகும்நிலவு.. உள்ளே புகுந்துஅடிக்கடிவிள்ககை அணைத்துவிடுகிறகாற்று… ஆசுவாசமாய்அடுப்பைக் கடந்து நடக்கும்பூனை ஆனாலும்.. விடியலில்பூக்கத்தான் செய்கிறதுமுற்றத்துநித்திய கல்யாணி. நண்பர்களே 1995 ல் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்து வெகு தொலைவில் இருந்த அக்கராயன் என்னும் கிராமத்தில் நாங்கள் வசிக்க நோர்ந்து அந்த இடப்பெயர்வு அனுபவங்களின் பதிவு இதுத.அகிலன்