நதிஅதன் புன்னகையைஒழிக்கிறதுகடல்மடியில் அவள்அனாசயமாய்அதை எடுத்துச்சூடுகிறாள்தன் கழுத்தில் நிலவுவானில் வரையும்அவள்கைகளிற்குச் சிக்காதஒளியின் புன்னகையை அவள் என் புன்னகையைவிற்றுக் கொண்டிருக்கிறாள்… தான்நட்சத்திரங்களைஉதிர்ப்பதறியாது ஒருபூவின் புன்னகைசெத்துக் கொண்டிருக்கிறதுஅவள் கூந்தலில் த.அகிலன்
Month: June 2006
வன்முறை..
அன்பேகாற்றில் நழுவவிடும்உன் வார்த்தைகளில் கத்திகள்வைத்தல்எங்கனம் சாத்தியமாகிறது… த.அகிலன்
மழை…..
ஒருநீண்ட தார்ச்சாலையில்சோவெனத்துரத்தும்மழையென விரட்டுகிறதுஉன்பிரிவு. ஒருகொடுமிருகத்தைப்போல். எதிரே விரியும்பெருவெளியின் நீளத்தைஎன் கால்கள் விழுங்க விழுங்க. மறுபடியும்முடிவற்று விரிகிறதுவெளிஉனை அழைக்கும்குரல்தொண்டைக்குள் தேங்கஎனை விழுங்கிப்போகிறது மழை. த.அகிலன்