தனது நான்கைந்து கவிதைத் தொகுதிகளைக் கையில் திணித்தபடி கவிதை பற்றி விடாப்பிடியாக ஒருவர் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் கடைசியாக வாசித்த கவிதைப்புத்தகம் எது எனத் என் நாக்குத்தவறிக் கேட்டதில் அவர் அற்புதமானதொரு கருத்தைச் சொன்னார்.. “நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு…
Category: புத்தகம்
கடல்புரத்தில்- நிர்வாணமான மனமும் கடலும்
வண்ண நிலவனின் கடல் புரத்தில் வாசித்தேன். நீண்டநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நாவல்.வாசித்து முடித்தபின்னும் கடல் புரம் அலைகளைப்போல் இரைந்துகொண்டிருக்கிறது இன்னமும். அதன் சொற்களாலும் அதனுள் நடமாடுகிற மனிதர்களாலும். தான் நேசிக்கிற ஒன்றைத் தவிர்க்க,அல்லது பிரிய நிர்ப்பந்திக்கப்படுகிற மனிதர்களின் துயரம் அந்த நாவலில் குடிகொண்டிருக்கிறது. அந்த நாவலில் வருகிற குருஸ் ஒரு குறியீடு. எல்லாவற்றையும் நேசிக்கிற தனது பாரம்பரியத்தை, தனது நிலத்தை, கடலை,காற்றை பிரிய மறுக்கிற அவற்றின் மீது தமது எல்லாப்பிரியங்களையும் கொட்டிவைத்திருக்கிற…
ஈழத்தின் இன்னொரு பெண் கவிதை முகம்…
“இயற்கையுடன் இணைந்த கிராமத்தில் அம்மம்மாவிடம் வளர்ந்தேன்.தனிமையும் சுதந்திரமும் அப்பாவின் அடக்குமுறைகளும் அற்ற இனிய சிறுபருவம். அம்மம்மாவின் நிழலில் கிடைத்தது. அந்தச் சூழல் கற்பனைகளையும் கவிதைகளையும் எனக்கு தந்தது. 90 களின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்தேன் அங்குப் பெற்ற அனுபவங்கள்தான் பின்னர் நானெழுதிய கவிதைகளுக்கு அடித்தளமாயின” என்று கூறும் பஹீமாஜகான் இலங்கை மெல்சிரிபுரவைத்ச் சேர்ந்தவர்.கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார்.குறைந்த எண்ணிக்கையிலான. ஆனால் காத்திரம் நிறைந்த கவிதைகளைப் பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ள இவரின்…