வாறான் வாறான் பூச்சாண்டி ரயிலு வண்டியில குழந்தைகளை பயங்காட்டுவதற்காக பூச்சாண்டிகள்.. பேய்கள்.. ஆவிகள் பிசாசுகள். அரக்கர்கள். இப்படி விதமான பாத்திரங்கள் உலவிக்கொண்டேயிருக்கிறது.. சிலவேளை நம்மிடையே வாழுகின்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள்.. குழந்தைகளைப் பயங்காட்டும் மனிதர்கள்.. இந்தா சயந்தன் மாமா வாறான் பிடிச்சுக்குடுத்திடுவன் எண்டு சொன்னாலே சில குழந்தைகள்.. சோற்றுருண்டையை முழுசா நேராக அடிவயிற்றுக்கே அனுப்பும்.. அச்சம் தான் மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கிறது.. குழந்தைகள் விதிவிலக்கா என்ன.. குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்கிற வார்த்தையை…
Category: எண்ணங்கள்
வீடெனப் படுவது யாதெனில்… பிரியம் சமைக்கிற கூடு..
கூரையின் முகத்தில் அறையும் மழையைப் பற்றிய எந்தக் கவலைகளும் அற்றது புது வீடு… இலைகளை உதிர்த்தும் காற்றைப் பற்றியும் இரவில் எங்கோ காடுகளில் அலறும் துர்ப்பறவையின் பாடலைப் பற்றியும் எந்தக்கவலைகளும் கிடையாது புது வீட்டில்.. ஆனாலும் என்ன புது வீட்டின் பெரிய யன்னல்களூடே நுழையும் நிலவிடம் துளியும் அழகில்லை.. இந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன்… (இதைக்…
நமீதா என்னை மன்னித்து விடுங்கள்..
நான் ஒரு தீவிரமான கலாச்சார விரும்பி என்கிற தவறான புரிதல் ஏற்பட்டு விட்டது. ஆனால் எனக்கு குட்டைப்பாவாடைகளையும் பிடிக்கும். குட்டைப்பாவாடைகளிற்கு ஒரு அபரிமிதமான சக்தி இருக்கிறது. அது ஸ்ரேயா அணிந்தாலும் சரி த்ரிசா அணிந்தாலும் சரி. எப்போதும் அவற்றின் மீதான மோகம் குன்றாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை வலைப்பதிவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பாலாபாயிடம் கேட்டால் அரைமணிநேர வகுப்பே எடுக்கிறார். எனது வலைப்பதிவுகள் கலாச்சாரமானவை என்று ஒரு நண்பர் சொன்னார். வலைப்பதிவுகள்…