பொதுவாக காஸ் குக்கருக்கு மருமகள்களுக்குத்தான் பயம் வரவேண்டும்.. ஆனால் எங்கட வீட்டில் மாமிக்கு பயம் வந்திருக்கிறது. நானும் கடந்த இருபது நாளாக காலமை எழும்பினோண்ண முதல் வேலை அடுப்பு மூட்டுறது.. நீங்கள் யாரவது உங்கட வீட்டில விறகடுப்பு மூட்டியிருக்கிறியளோ.. அது ஒரு தனிக்கலை.. என்னைக்கேட்டால் நான். அதை 65 வது கலையாக சேர்க்கச் சொல்லி சிபாரிசே செய்வன்.. சமையல் கலையுக்குள்ள கடைசி வந்தும் இதைச் சேக்கமுடியாது.. ஆனா இங்க நான்…
Category: எண்ணங்கள்
ஊரான ஊரும், நினைவுகளை விடாத மாரித்தவக்கையும்..
கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கும் மழை.. மேலோடு தடவிப்போகும் நிலவு.. உள்ளே புகுந்து அடிக்கடி விளக்கை அணைத்துவிடுகிற காற்று… ஆசுவாசமாய் அடுப்பைக் கடந்து நடக்கும் பூனை ஆனாலும்.. விடியலில் பூக்கத்தான் செய்கிறது முற்றத்து நித்திய கல்யாணி…. இந்தக்கவிதையை நான் அக்கராயன் குளத்தில் நாங்கள் இருந்தபோது எழுதினேன்.. என் கத்துக்குட்டிக் கவிதைகளில் இதுவும் ஒன்று..(இப்போதும் அது அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விசயம்) இன்றைக்கு அக்கராயன் மகாவித்தியாலயம் என்று எழுதப்பட்ட சுவரின் எதிரில் இராணுவத்தினர்…
மன்மதராசாவுக்கு கல்யாணம்..
தேவதை தேவையில்லை தெளிந்த நல் வதனம் போதும் வைர நகையெதற்கு? வழித்துணையாதல் இன்பம் படிக்கிற பழக்கமுண்டு அடிக்கடி திட்ட மாட்டேன் பாதியாய் இருக்க வேண்டாம் முழுவதும் நீயே ஆகு இம்சைகள் இருக்கும் கொஞ்சம் இனிமைதான் ஏற்றுக்கொள்க வருமானம் பரவாயில்லை வாழ்வதற்கு கைவசம் கவிதைகள் வாய்க்கப் பெற்றேன் காதலில் விழுந்தேனில்லை எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான பெயரையும் நீயே இடலாம் சந்தேகம் துளியும் இல்லை அந்தரங்கம் உனக்கும் உண்டு சமயத்தில் நிலவு…