மஞ்சு ஒரு அழகான குட்டிப்பெண். 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும் போதெல்லாம் அவள் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்ற சின்னக்காவின் வார்த்தைகளை நம்பி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்துக்கொள்வாள்.. அகிலன் மாமா ஆள்தான் கறுப்பு மனசுமுழுக்க வெள்ளை (நம்பலாம்) என்று அவளது கனவில் ஒரு பட்டாம் பூச்சி சொல்லிய நாளொன்றில். அவளது அகிலன் மாமா வெள்ளையாய் மாறுவதற்காக எனக்குச் சிலமுத்தங்களும்…
Category: எண்ணங்கள்
விடுதலைப் புலிகள் சில கேள்விகள்…
நானும் ஒரு பிரபலமான வலைப்பதிவராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டாலும் அது முயற்சியாகவேயிருக்கிறது இப்போது வரைக்கும். கடைசியா ஒரு சாத்திரியைப் போனவாரம் சந்தித்தேன். (இவர் பதிவர் சாத்திரி அல்ல டி.வி.புகழ்) அவர் சொன்னார் ஏழரைச் சனியன் உச்சத்தில் இருப்பதால் இதுபோன்ற தாமதங்கள் வரத்தான் செய்யும்.. ஆனாலும் நீர் அஞ்சக்கூடாது எண்டு. நானா அஞ்சுவதா எண்டு அவர் எதிரில் மிடுக்காக சொன்னாலும் அதிகாலை பதினொரு மணிக்கு எழுந்து பல்விளக்குகையில் மதில் தண்ணீர்த் தொட்டிக்கு…
முதல் முத்தமும் சில முதல் நாட்களும்..
இன்றைக்கு புது வருசத்தின் முதல் நாள். முதல் நாட்கள் எப்போதும் அன்றைய பொழுதில் அற்புதமாயிருப்பதில்லை. நினைவுகளில் மடிக்கப்பட்டு பின் எப்போதோ புரளும் நினைவின் பற்சக்கரத்தைப் பற்றியபடி மேலேறி வரும்போதும் இருளடர்ந்த குகைக்குள்ளிருந்து சட்டெனத் திசைகளெங்கும் மின்மினிப்பூச்சிகள் பறந்து வர்ணஜாலம் காட்டுவதைப்போல ரம்யமாயிருக்கும். அல்லது மனசுக்குள் இருக்கும் நினைவுகளையெல்லாம் விரட்டி வெறுமையாக்கி பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதைப்போலத் தோற்றத்தை தரும். அடடா இப்படியெல்லாம் செய்திருக்கிறேனா என் வாழ்க்கையில் என்று சில சமயம் வெட்கம்…