“பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒருபாட்டு” இந்த பாடல்காட்சிதான் எனக்கு நான் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவில் தீபங்களை வைத்து எடுக்கப்பட்டவற்றில் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர். எங்கள் சின்னவயதில் விளக்கீடு என்றால் ஒரே கொண்டாடடம் தான் .தீப்பந்தங்களை கொழுத்தி…
Category: எண்ணங்கள்
மயானங்களை புனிதமாக்கும் மாவீரர்நாள்
தமிழீழ மாவீரர் நாள் ஒரு அனுபவம்நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது…
தனிமனித தாக்குதல்களும் செ.வலைப்பதிவர் சந்திப்பும்
சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் கொண்டேன்.அப்பா ரொம்ப்பிரபலமாயிட்டேனோ என்று தோன்றுகிறது.ஈழப்பிரச்சினையை சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் அதை ஏற்றுகொண்டவர்கள்,கொள்ளாதவர்கள் அவர்களின் கருத்துக்கள் இப்படி சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்ற காரணத்தால் எனக்கும் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்ளாதவர்கள் என்று நிறையப்பேர் எழுதித்தள்ளிவிட்டார்கள் (நானும் ஜோதியில் கலந்து கொள்ளவேண்டாமா)அது மட்டுமல்ல சூடான விவாதங்களும் தனிமனித…