என் கவிதையின்கரங்கள்நீண்டபடியிருக்கின்றனசொற்களைத்தேடி…. தாயின் இறகுகளைநீங்கித் தப்பும்ஒர் தனியன் குஞ்சைப்போலசிக்கிக்கொள்ளாதுதப்பியலைகின்றன சொற்கள்… ஊழியோய்ந்த நிலத்தில்எஞ்சியஒற்றைக்குழந்தையின்திணறலெனஅழுதபடியிருக்கிறதுஎன் கவிதையும்அதன் மனமும்….
Category: கவிதைகள்
சுயவிசாரணை….
என் அடையாளம்குறித்த கேள்விகள்கிளம்புகின்றனபூதாகாரமாய்… அப்பனுக்கும்அம்மைக்கும்ஆயிற்றுஉயிரும் உடலும். எனதுபுன்னகைகையைகாலம் கொண்டேகிற்று. என்னிடம் எனக்கென்றுஏதுமில்லை. உனதுமுத்தங்களையும்நினைவுகளையும் கூடநீயேசொந்தங் கொண்டாடுகிறாய். யாரோடும் பகிர முடியாது போனபுன்னகையும்முத்தங்களும்துயரங்களும்என்னுடையவைதானென்றுயாருக்குத்தெரியும்? என் வார்த்தைகளின்அர்த்தம் கூடஎனதாயில்லை. மறுக்கமுடியாத்துயருள்மூழ்கியஎனது கவிதைகள்என்னின்று அகன்றன. இப்போதுஎனக்குள்கேள்விகளை நிரப்புகிறதுதனிமை. புன்னகைக்கும்வேதனைக்கும்இடையிலான தூரங்கள்நீண்டபடியிருக்கின்றன…. ஆங்காங்கேவிரிந்தபடியிருக்கும்காலத்தின் கண்ணிகளில்..வீழ்ந்தபடியிருக்கும்எனது பாதங்கள்…. ஏதேனும் ஒருபொழுதில்முளைக்கும்அழத்தோன்றாவொருமனக்காந்தல்உனதுமுத்தங்களிற்காய் ஏங்கும். ஒரு பொழுதின்துயருள் தோன்றிஎழுதவியலாது போனகவிதை வெறுமையைநிரப்புகிறது மனசுள். நினைவறையின் மடிப்புகளினின்றும்பறப்படுகின்றனஇன்னும்பகிரப்படாத்துயரங்கள்அழுவதற்கானவெட்கங்கள் ஏதுமற்று…இரண்டு வருடங்களிற்கு முன்பு ஒரு தூக்கமற்ற இரவில்…
எழுதப்படாத சொற்களும் தாள்களும்…
நான்வெற்றுத்தாள்களைவாசிக்கிறேன்…. குருதியும்ரணங்களும் வழியும்துயரத்தின் மிகு சொற்கள்அத்தாள்களின் மீதுஉறைந்துள்ளன…. தாள்களின்ரகசிய இடுக்குகளில்ஒழிந்திருக்கிறது..வேட்டைக்காரனின்அம்புகள் தீட்டியஅழுகையின் வரைபடம்.. எழுதப்படாதிருக்கிறஎந்தச்சேதியிடமும்புன்னகையில்லை…. தன் பின்னலைத்தளர்த்தியஒரு கிழவியின்சாபத்தின் சொற்கள்ஊரை நிறைத்தது… பின்பொருநாள்…பூவரசம் வேலிகளைத்தறித்தபடியெழும்கோடரியின் கரங்கள்ஒரு குழந்தையிடமிருக்கக்கண்டேன்…. தடுக்கமுயலும்கிழவியிடமிருந்து எழும்இயலாமையின் சொற்கள்தேய்ந்து போயிற்றுஊடுபத்தியகைவிளக்கைப்போல…..