பெருமரத்தைபூதமெனப் படியவிட்டுஉறுமிக்கடக்கிறதுவெளிச்சம்…. தனித்து நடக்கும்இரண்டு பாதங்களைக்கவனியாதசகபயணியாய்நீள நடக்கிறது தெருமெளனியாய்…. நான்ஒரு நேரந்தப்பியபயணியைப்போல்காத்திருக்கிறேன்தூரத்தெரியும்ஒளிப்புள்ளிகளை நம்பியபடி…
Category: கவிதைகள்
இரண்டாம் காதல்….
காற்றுக்கலைத்துப்போனமேகச்சிற்பத்தின்மீந்த பாதியைப்போலிருக்கின்றனஉன் நினைவுகள் நம்பிரிவின் முதற்கணங்களின்துளிர்த்த கண்ணீரின்ஈரம்உலர்ந்து போய்விட்டிருக்கிறது. எனக்குகுழப்பமாயிருக்கிறது.. நேற்றுக்கடந்துபோனஒருத்தியிடம்.எப்படி வந்தன?உன்புன்னகையின் ரகசியங்கள்..
கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..
01.உன்உப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது இறகுகளால்வருடிக்கொண்டேயிருக்கிறது கோடை. வாசல் வரை வந்தும்உள்ளே வராததோழியைப்போல்..முற்றத்தில் படர்ந்துபின்வெளியேறிப்போகிறது வெயில் அறை முழுதும்தன் தகிப்பை நிரவியபடி. 02.கோடைதீர்ந்து விட்டது… தகிப்பின்வாடையைகுடித்தபடி அலைந்துநிழலொடுங்கிக் கிடக்கிறதுகோடையின் குழந்தை…. மழைக்குத் தாளமிடும்சிறுமியின் புன்னகைகூரைகடந்து விழும்முதல் துளியில்கரைந்தவிழ அவள்காலடியில் உடைந்துஅழத்தொடங்குகிறதுகோடை..